வி.ஏ.ஓ. தேர்வு ரகசியங்கள்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதை அறிவீர்கள். இவ்வறிவிப்பின் மூலம் வி.ஏ.ஓ. பதவிக்கு தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும். இவற்றை பொது அறிவு பாடத்திலிருந்து 100 கேள்விகளும், பொதுத்தமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகளும் கேட்கப்படும். அதன்படி ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவற்றுள் அதிகமான சரியான விடைகளை யார் அளிக் கிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும். இதில் ஐ.ஏ.எஸ்., வங்கி, இரயில்வே தேர்வுகள் போன்று நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. இத்தேர்வில் ஒருவர் வெற்றிப் பெற்று வி.ஏ.ஓ. ஆக வேண்டுமெனில் தமிழ் பாடத்தில் 100 வினாக்களுக்கு சரியான விடைகளையும், பொது அறிவு பாடத்தில் 85 வினாக்களுக்கு சரியாகவும், ஆக மொத்தம் 200 வினாக்களில் 185 கேள்விகளுக்கு சரியான பதில் தருபவர்கள் உறுதியாக வெற்ற பெற முடியும்.

அது சரி, பயிற்சி மையங்களுக்கு செல்லாமல், தனியாக தயார் செய்பவர்களால் இந்த அளவுக்கு மதிப்பெண்களை பெற முடியுமா? என்றால் முடியும். நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும். எந்த பயிற்சி மையங் களிலும் சென்று படிக்காமல் 190 கேள்விகளுக்கு மேல் சரியாக பதில் தர உங்களால் முடியும். அதற்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் "பொது அறிவு உலகம்' தயாராக உள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, இத்தேர்வின் போக்கினை நன்கு புரிந்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் படிக்க வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும். இத்தேர்வில் 200 கேள்விகள் எப்படி கேட்கப் படுகின்றன, அதற்கு எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

பொது அறிவும், பொதுத்தமிழும்

பொது அறிவுக்கான 100 வினாக்களும் டி.என்.பி.எஸ்.சி.-யின் சிலபஸின்படி கேட்கப்பட்டாலும், அவை மிக நுட்பமாக ஆராய்ந்தோமெனில் பின்வருமாறுதான் கேட்கப்படுகின்றன. இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலைப் போராட்டம் பாடத்திலிருந்து 6 அல்லது 7 கேள்விகள், புவியியல் பாடத்தில் பொதுப் புவியியல், தமிழக புவியியல், இந்திய புவியியல் உட்பட 7 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்திய அரசிய லமைப்பு-8, இந்திய பொருளாதாரம்-8, இயற்பியல்-4, வேதியியல்-4, உயிரியல்-12, புள்ளியியல்-4 அல்லது 3, அறிவுக்கூர்மை (கணிதம்)-8, இந்தியப் பொது அறிவு-5, நடப்பு நிகழ்வுகள்-8, அறிவியல்-2, கம்ப்யூட்டர்-2, இந்தியப் பண்பாடு-3, தமிழக பொது அறிவு-7, தமிழக வரலாறு-6, தமிழ் இலக்கிய வரலாறு-3 என்றவாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதை பார்த்ததும் ஒவ்வொரு பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் தானா என நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் 1 கேள்விக்கூட உங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியுடையது, நீங்கள் இத்தேர்வில் வெற்றிப் பெற வேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் படிக்க வேண்டும்.

அடுத்து பொதுத்தமிழ் பார்ப்போம். டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள பொதுத்தமிழ் சிலபஸானது, 20 பாடக்குறிப்புகள் உள்ளடக்கியது. அதில் ஒவ்வொன்றுக்கும் 5 கேள்விகள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

படிக்கும் முறை

வெற்றியாளர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை. மற்றவர்கள் செய்வதையே புதுமையாக செய்கிறார்கள். அதுபோல நீங்கள் வெற்றிபெற்றே தீர வேண்டுமானால் புதிய முறையில் தேர்வை அணுக வேண்டியது அவசியம். முதலில் இத்தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ்நாட்டு அரசு பாடநூல் நிறுவனத்தின் பாட நூல்களிலிருந்தே கேட்கப்படுகின்றது என்பது உண்மை. ஆனாலும் கம்ப்யூட்டர், புள்ளியியல், அறவியல், இந்தியப் பண்பாடு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை 11, 12-ம் வகுப்பு பாடநூல்கள். இந்திய பொது அறிவு, தமிழ்நாடு பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் போன்றவை வெளியிலிருந்து கேட்கப்படும் வினாக்கள். அதனால் பாடநூல்களை முழுவதுமாக படித்து கொள்ளுங்கள். சிலபஸ் உள்ளடக்கிய (பாடநூல்கள் மற்ற முக்கிய நூல்கள்) அனைத்து பாடக்குறிப்புகளையும் "பொது அறிவு உலகம்' இதழில் விரிவாக தந்து வரு கிறோம். அதனையும் சேர்த்து படித்து கொள்ளுங்கள். அதன் பின்னர், பொது அறிவு உலகம் வெளியிடுM தேர்வு சிறப்பிதழ்களில், தேர்வுக்கு கேட்கப்படவுள்ள மிக மிக முக்கிய வினா-விடைகள், அடிக்கடி கேட்கப்படும் முந்தைய தேர்வு வினா-விடைகள், மிக முக்கியமான டி.என்.பி.எஸ்.சி கேள்விகளை தயாரிக்கும் அதே முறையில் அதே நூல் களிலிருந்து 15,000-த்திற்கும் மேற்பட்ட வினா-விடைகளை 5 சிறப்பிதழ்களாக வெளியிட்டு வருகிறோம். இவற்றை அனைத்தையும் வாங்கி பயிற்சி செய்யுங்கள்.

மாதிரி தேர்வுகள்

படித்துக்கொண்டே இருந்தால் சோர்வுதான் வரும். ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்தவுடன்யஆஞ சிறப்பிதழை கொண்டு மாதிரி தேர்வு எழுதி பாருங்கள். உங்களை நீங்களே சோதித்துக் கொண்டால், எப்படி படித்துள்ளீர்கள், இன்னும் எப்படி படிக்க வேண்டும் என்பதை சுய மதிப்பிடலாம். இதன் மூலம் தேர்வை வென்று விடுவோம் என்ற தைரியமும் கிடைக்கும். அதேபோல் பொதுத்தமிழில் நூறு வினாக்களுக்கும் சரியான மதிப்பெண்களை பெற்றுத்தரும் நோக்கில் "பொதுத்தமிழுக்கான சிறப்பிதழ்' கல்லூரி பேராசிரியர்களின் துணையுடன் தயாரித்துள்ளோம். இப்போது அச்சில் உள்ளது. விரைவில் வெளிவரும். எமது அனைத்து வெளியீடுகளும் யஆஞ தேர்வுக்கு 100 சதவீதம் பொருந்தும் முறையில் தயாரிக்கப்படுதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முந்தைய குரூப்-2, ஊ.ஞ., காவலர், ந.ஒ. தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பாடத்தொகுப்புகள் மற்றும் மாதிரி வினா-விடைகள் தொகுப்புகள் வெளி யிட்டுள்ளோம். அவற்றில் அதிக அளவிலான வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றோம். சமீபத்தில் பிரபலமான நாளிதழ் ஒன்று மார்க்கெட் கைடை படிக்க வேண்டாம் என்று செய்தி வெளியிட்டனர். அதன்பின் அந்த நாளிதழ் வெளியிடும் வி.ஏ.ஓ. தேர்வு மாதிரி வினா-விடை (இணைப்பு) குறிப்பிட்ட சில மார்க்கெட் கைடி லிருந்தே எடுக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. அதுபோல இல்லாமல் பொது அறிவு உலகம் மாணவர்கள் நலன் சார்ந்தே வெளிவருகிறது என்பதை அறிவீர்கள்.

வாசகர்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

எண்ணற்ற பொது அறிவு உலகம் வாசக கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு வரு கின்றனர். அவர்களின் சந்தேகங்களை களைவது "பொது அறிவு உலக'த்தின் கடமை. அந்த அடிப்படையில் சமீபத்தில் கேட்கப்பட்ட சந்தேகங்களை தொகுத்து இங்கு விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளோம். சரியாக எவ்வளவு பேர் வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்?

13 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. அதில் 12 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகின. தொடர்ந்து அனைத்து விண்ணப்பங்களும் பிரிக்கப்பட்டு அடுக்கிவைத்து எண்ணும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த கட்டுரை எழுதும் வரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கட்டி வைத்துவிட்டனர். மீதியுள்ளவற்றை தொடர்ந்து கட்டுமானப்பணி நடந்துவருகிறது. விற்பனையாகிய அளவிலான விண்ணப்பங்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவல கத்திற்கு வரவில்லை. ஏனெனில் பல ஆயிரக் கணக்கான பேர் விண்ணப்பத்தை அனுப்பாமல் இருந்துவிட்டனர்.

எந்தெந்த காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்?

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கிய மூன்று காரணங்கள் ஒன்று, கையெழுத்திடாமல் விண்ணப்பத்தை அனுப்பி யிருத்தல். இரண்டு, தேர்வுக் கட்டணத்தை செலுத்தாமல் விட்டிருத்தல், குறிப்பாக ஆதிதிராவிடர்/அருந்ததியர், பழங்குடியினர் உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை இவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவ திலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பின், முதல் மூன்றுமுறை மட்டும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவை யில்லை. பட்டப்படிப்பு இல்லாமல் +2, அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் கட்டாயம் தேர்வுக் கட்டணத்தை செலுத்தி யிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மூன்றாவ தாக சான்றிதழ்களில் முறைகேடு செய்தவர்கள். இவைகள் தவிர மற்ற எந்தவொரு காரணத்திற் காகவும் உங்களின் விண்ணப்பங்கள் உறுதியாக நிராகரிக்கப்படமாட்டாது. அட்டஸ்டேஷன் வாங்கவில்லை என்றாலோ, விண்ணப்பப் படிவத்தில் தெரியாமல் செய்த சிறியப் பிழை, ஒழுக்கம் மற்றும் நடத்தைச் சான்றிதழ் அனுப் பாமலிருந்தாலோ இன்னும் எந்த ஒரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படமாட்டாது. டி.என்.பி.எஸ்.சி சேர்மன் அவர்களும் மற்ற அதிகாரிகளும் மனிதநேயம் கொண்டவர்கள். உங்களின் விண்ணப்பங்களை உங்களின் வாழ்க்கையாக கருதுகிறார்கள். அதனால் விண்ணப்பங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

வி.ஏ.ஓ. தேர்வு எப்போது?

2007-ம் ஆண்டு 2500 காலியிடங்களுக்கான வி.ஏ.ஓ. தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்தனர். பின்னர் எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு, 2007 ஜூன் 10-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதுபோல வி.ஏ.ஓ. போன்ற பெரிய தேர்வுகளை நடத்தும்போது எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்களோ அதற்கு தக்கவாறு வினாத்தாள்கள், தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அதற்கு திட்டமிடவும் செயல்படுத்தவும் சிறிது காலம் தேவைப்படுவதால் தேதி பின்னர் அறிவிப்பது இயல்பான ஒன்றாகும். எமக்கு கிடைத்த தகவல்படி ஜனவரி இரண்டாம் வாரத்தில் வி.ஏ.ஓ. தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் மருத்துவ பணிகளுக்கான நேர்காணல். செப்டம்பர் மாதம் முழுவதும் வி.ஏ.ஓ. தேர்வு விண் ணப்பங்கள் பரிசீலனை மற்றும் சென்ற வருடம் நடைப்பெற்ற குரூப்- 2 தேர்வு முடிவுகள் தயாரித்தல். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்பு மற்றும் குரூப்-1 தேர்வு முடிவுகளை தயாரித்தல். டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுதல். இதன் பொருட்டு, டி.என்.பி.எஸ்.சி தலைவர் அரங்க. செல்லதுரை ஐ.ஏ.எ.ஸ் அவர்கள் ஓய்வின்றி உழைக்கின்றார். வயதாகிவிட்டாலும் அவரின் வேகமும், திட்டமிடலும் மிகவும் சிறப்பான முறையில் உள்ளது. தமிழக இளைஞர்கள் மேல் மிகுந்த நேசம் கொண்டதால், தனது காலத்திலேயே அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுதர வேண்டுமென நினைக்கிறார். அதையே கூறிவருகிறார்.

அடுத்த அறிவிப்பு ஏதேனும் உண்டா?

நிச்சயம் உண்டு. இப்போதுதான் வரு வாய்த்துறை, சமூக நலத்துறை, வணிக வரித்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் உள்ள காலியிடங்கள் கண்டறிந்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அதனால் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் குரூப்-2 தேர்வுக்கான காலியிடங்கள் சென்ற ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்.

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்


கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன ?

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன ?

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

என்னதான் பணிகள் ?

1. பட்டா பெயர் மாற்றுதல்.

2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.

இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

."கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும
Photo: கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ )  V.A.O வின் பணிகள் என்ன ?

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

என்னதான் பணிகள் ?

1. பட்டா பெயர் மாற்றுதல்.

2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.

இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

."கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும

VAO விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை



VAO 
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை

               விண்ணப்பத்தினை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும். விண்ணப் பத்தில் உள்ள கட்டங்களினுள் எழுத, நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனாவினை உபயோகிக்கவும். பின்னர் உரிய இடங்களைக் கருமையிட ஐஇ பென்சிலை பயன்படுத்தவும். விண்ணப்பத்தின் அனைத்து பதிவுகளும் ஆங்கிலத்தில் (பெரிய எழுத்தில்) இருக்க வேண்டும்.

1. விண்ணப்பிக்கும் தேர்வின் பெயர் : TNPSC- VAO

1. (a) விளம்பர எண்: 248

2. விண்ணப்பதாரரின் பெயர் : ஆங்கிலத்தில் (பெரிய எழுத்துக்களில்) அதற்கென கொடுக்கப்பட்ட பெட்டிகளில் எழுத வேண்டும். பெரியதை முதலிலும், தலைப்பெழுத்தைப் பெயருக்கு பின்புறம் எழுதி உரிய பெட்டிகளின் கீழே கொடுக்கப் பட்டுள்ள கட்டங்களை HB பென்சிலைக் கொண்டு கருமையாக்கிக் காட்ட வேண்டும்.


3. தேர்வு/ பணிக்குறியீடு : 050

4. தேர்வு மையக் குறியீடு : தகவல் சிற்றேட்டில் பக்கம் 17-ல் உள்ள பிற்சேர்க்கை 1-ல் Name of Centres and Centre Codes என்ற தலைப்பின் கீழ் உள்ள தேர்வுமையங்களில் விரும்பிய ஒன்றை தேர்வு செய்து, அத்தேர்வு மையத்திற்குரிய குறியீட்டு எண்ணைக் கண்டு பிடித்து, அவ்வெண்ணை உரிய கட்டங்களில் எழுதிக் கீழேயுள்ள அதற்குரிய எண்களைக் கருமையாக்கவும்.

5. பிறந்த தேதி : சரியான பிறந்த தேதியை குறிப்பிடவும்.

6. மதம் : இந்து என்றால் 1, முஸ்லீம் என்றால் 2, கிறிஸ்துவர் என்றால் 3, மற்றவர்கள் 4 என பெட்டியில் பேனாவினால் எழுதி அதற்குரிய கட்டங்களில் பென்சிலால் கருமையாக்கவும்.

7 வகுப்பு : Others ( (மற்றவை) என்றால் 1 எனவும், SC என்றால் 2 எனவும், SC (A)என்றால் 3 எனவும், ST என்றால் 4 எனவும், MBC என்றால் 5, DC என்றால் 6, BC என்றால் 7 எனவும்,  BC (M)என்றால் 8 எனவும் எழுதி அதற்குரிய கட்டங்களை பென்சிலால் கருமையாக்கவும்.

7 (a) உட்பிரிவு பட்டியல் எண்: வகுப்பு உட்பிரிவு பட்டியல் எண்ணை/பணி போட்டி யாளர்களுக்கான விதிமுறைகளில் காண்க.

8. பாலினம் : ஆண்களாக இருந்தால் Male கட்டத்தையும், பெண்களாக இருந்தால் Female என்ற கட்டத்தையும் பென்சிலால் கருமையாக்கவும்.

9. ஆதரவற்ற விதவை : ஆதரவற்ற விதவை என்றால் Yes-க்கு நேரான கட்டத்தையும், இல்லையென்றால் No-க்கு நேரான கட்டத்தையும் கருமையாக்கவும்.

10. முன்னாள் ராணுவத்தினரா? ஆம் அல்லது இல்லை.

11 உடல் ஊனமுற்றவரா? ஆம் அல்லது இல்லை.

12 தட்டச்சு/சுருக்கெழுத்தர் தகுதி : பூர்த்தி செய்ய தேவையில்லை,

13. தகப்பனார் பிறந்த இடம் : உங்கள் தகப்பனார் பிறந்த இடம் தமிழ்நாடு எனில் 1. Tamilnadu  என்ற கட்டத்திற்கு நேராகவும், தமிழ் நாட்டை தவிர வேறு மாநிலமாக இருந்தால் 2. Other than TN என்ற கட்டத்திற்கு நேராகவும் கருமையாக்கவும். இந்திய குடிமகன் இல்லை எனில் 3. Other than India என்ற வார்த்தைக்கு நேராக உள்ள கட்டத்தை கருமையாக்கவும். 

13. (a) நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் தகவல் சிற்றேட்டில் பக்கம் 17-ல் பிற்சேர்க்கை 1-ல் Name of District and Districts Codes என்ற தலைப்பிற்கு கீழேயுள்ள மாவட்டத்தில் உங்கள் மாவட்ட குறியீட்டு எண்ணை தேர்வு செய்து எழுதவும்.

14. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி பெற்றுள்ளீரா? ஆம் எனில் வங்ள் என்ற வார்த்தைக்கு நேரான கட்டத்தையும், இல்லையெனில் சர் என்ற வார்த்தைக்கு நேரான கட்டத்தையும் கருமையாக்கவும்.

14. (a) நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிய முன் அனுபவம் பெற்றுள்ளீரா?

இல்லை என குறிப்பிடவும்.

14. (b) உயர்ந்த பொதுக் கல்வித் தகுதி

கல்வித் தகுதியை குறிப்பிடவும்.

14. (c) நிரப்பத் தேவையில்லை.

14. (d) நிரப்ப தேவையில்லை. 

15. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி : இறுதிப் பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியே குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதி தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியாகக் கருதப்படும். ஏதேனும் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் நிலுவையிலிருப்பின் நிலுவைத் தாள்கள் உட்பட அனைத்துத்தாள்களிலும் தேர்வு எழுதி அவற்றின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியே குறிப்பிடப் பட்டுள்ள கல்வி தகுதி தேர்வு அறிவிக்கப்பட்ட தேதியாக எடுத்துக் கொள்ளப்படும். பத்தாவது மதிப்பெண் பட்டியலில் உள்ள தேதி.

 15. a  பூர்த்தி செய்யத் தேவையில்லை.

16. பெயர் மற்றும் விண்ணப்பதாரரின் விலாசம் : விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரியை (ஆங்கில பெரிய எழுத்துக்களில்) எழுதவும். பிறந்த இடத்தை எழுதவும். INDIAN என்று எழுதவும். வசிக்கும் இடத்தின் பெயர் எழுதவும்.  உங்கள் தாய்மொழி எந்த மொழியோ அந்த மொழியையும், தகப்பனார் பெயர் கணவர் பெயர் எழுதவும். இவை அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் எழுதவும். அருகில் உள்ள கட்டத்தில் உங்களுடைய புகைப்படத்தை ஒட்டவும்.

17. தமிழில் கல்வித்தகுதி : SSLC , HSC  என குறிப்பிடவும்.

18. தேர்வுக்கட்டண விவரம்: தகவல் சிற்றேடு பிற்சேர்க்கை பட்டியலிடப்பட்டுள்ள அஞ்சலகங்களில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தின் மூலமாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தியதற்காக பெறப்பட்ட அஞ்சலக பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் உறுதிமொழி (Declaration) பகுதிக்கு  ஆதி திராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை  ஆகியோர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவை யில்லை. இதற்கு முன்னர் மூன்று முறை தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறாத பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர்.

19. தற்போதைய முகவரியின் அஞ்சல் எண்: உங்களின் முகவரி அஞ்சல் எண்ணை குறிப்பிடவும்.

20. வயதுவரம்பு சலுகை கோருகிறீர்களா? ஆம் அல்லது இல்லை.

21. கட்டண விலக்கு கோருகிறீரா? : இலவசச் சலுகை இம்முறையும் சேர்த்து எத்தனை முறை பயன்படுத்தியுள்ளீர்?, எவ்வகையின் கீழ் கட்டண விலக்கு கோரியிருக்கிறீர்கள் என்பதை பார்க்கவும்)

21. (a) இலவச சலுகையை எத்தனை முறை பயன்படுத்தியுள்ளீர்? பயன்படுத்தி இருந்தால் எத்தனைமுறை பயன்படுத்தியுள்ளீரோ அதற்கு நேரான எண்ணிற்கு உரிய கட்டத்தைக் கருமையாக்கவும். மூன்று தடவைக்கு மேல் இச்சலுகையை பயன்படுத்தும் SC, ST , ஆதரவற்ற விதவை, உடல் ஊனமுற்றோர் பிரிவினர்கள் 4 என்ற கட்டத்தைக் கருமையாக்கவும். 

21. (b) எவ்வகையின் கீழ் கட்டண விலக்கு கோருகிறீர்கள் : என்ற விவரத்திற்கு கீழ் உள்ள கட்டத்தில் SC/Sc(A) என்றால் 1 எனவும், ST என்றால் 2 எனவும், MBC/DC என்றால் 3 எனவும், BC. (Bc(m)என்றால் 4 எனவும், PH  என்றால் 5 எனவும், Ex.service Man என்றால் 6 எனவும், DW எனில் 7 எனவும் கட்டத்தில் எழுதி கீழே உள்ள கட்டத்தை கருமையாக்கவும்.

22. தேர்வுக்கு தேர்ந்தெடுக்கும் பாடங்கள் : கட்டாயபாடம் பொதுத் தமிழை தேர்ந் தெடுத்தால் 1 எனவும், பொது ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தால் 2 எனவும் பெட்டியில் எழுதி அதற்குரிய கட்டத்தை கருமையாக்கவும். விருப்பப்பாடம் 1 மற்றும் விருப்பப்பாடம் 2 ஆகிய கட்டங்களை நிரப்பத் தேவையில்லை.

23. துறை ஒழுங்கு நடவடிக்கை : ஆம் அல்லது இல்லை. 2

3. (a)குற்றவியல் நடவடிக்கை ஆகியவற்றுக்கு பெரும்பாலும் சர் கட்டங்களை கருமையாக்கவும் (குற்றப் பின்னணியில் இல்லையெனில்)


23. (b)நேர்காணலுக்கு சென்றிருந்தால் வங்ள் எனவும், இல்லையெனில் சர் 

23. (c) அரசியல் பங்கேற்பு :

பெரும்பாலும் NO கருமையாக்கவும் (அரசியல் பங்கேற்பு இல்லையெனில்)

24. பதவி முன்னுரிமை : பூர்த்தி செய்யத் தேவையில்லை.

25.  முந்தைய / தற்போதைய / நிலையான / தற்காலிகப் பணி : அரசுப் பணியில் இருந்தால் குறிப்பிடவும். இல்லையெனில் பூர்த்தி செய்யத் தேவையில்லை.

25. (a) முந்தைய நேர்காணல்/ எழுத்துத் தேர்விற்கான வருகை விவரம் இருந்தால் தெரிவிக்கவும்.

26. இணைத்து அனுப்ப வேண்டிய சான்றுகள் சரிபார்க்கும் பட்டியல்: விண்ணப்ப படிவத்துடன் எவற்றையெல்லாம் இணைத்து அனுப்புகிறீர்களோ அதற்கு நேராக உள்ள கட்டத்தை கருமையாக்கவும்.

1. உறுதிமொழிக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள இடத்தில் தேர்வு கட்டணம் செலுத்தியதற்குரிய அஞ்சலக பற்றுச்சீட்டை ஒட்டவேண்டும். அதற்கு அருகில் உள்ள கட்டத்தில் கையெழுத்து இட வேண்டும். அஞ்சலக பற்றுச்சீட்டு ஒட்டாத கையெழுத்து இடப்படாத விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

2. பிறந்த தேதிக்கான சான்று (கல்விச் சான்று)

3. சாதி சான்றிதழ்

4. கல்வித் தகுதிக்கான சான்று

15. போதிய தமிழறிவு பெற்றிருப்பதற்கான சான்று

18. ஒரு A அல்லது  B பிரிவு அரசு அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைச் சான்று

19. இறுதியாக படித்து முடித்த அல்லது படித்துக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று.

20. உடல் தகுதிச் சான்று  (Fitness Certificate)

21. ஒரு மருத்துவ அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பதாரரின் உடல் ஊனத்தின் அளவு சதவீகிதத்தில் குறிப்பிடப் பட்டு, அந்த உடல் ஊனம் அவர் தனது பணிகளை திறம்பட ஆற்ற எவ்விதத்திலும் தடையாக இருக்காது என்பதை காட்டும் சான்றிதழ்.

23. முன்னாள் ராணுவத்தினராக இருப்பின் அதற்கான சான்று

குறிப்பு : விண்ணப்பதாரர்  எந்தவொரு மூலச்சான்றிதழையும் (Original Documents)  அனுப்பக்கூடாது. நகல் அச்சு (ஜெராக்ஸ்) எடுக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை (உறுதிச்சான்று அளிக்கப்பட்டவை) மட்டுமே விண்ணப்பத்துடன் அனுப்பிவைக்க வேண்டும். A அல்லது B பிரிவு அரசு அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட சான்றுகளின் நகல்கள் இவ்வலுவலகத்தில் பெறப்படவில்லை எனில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

RATION CARD INFORMATION


குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை" அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.

யார் தகவல் கேட்கலாம்?

எந்த ஒரு இந்திய குடிமகனும் தகவல் பெறலாம்.

யாரிடம் தகவல் பெறலாம்?

அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் போன்றவைகளிடம் தகவல் கேட்கலாம்.

தகவல் அளிக்க யாருக்கெல்லாம் விலக்கு?

தகவல் அளிப்பதிலிருந்து ஒரு சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை, ஒருமைப்பாடு, ராணுவம் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அளிக்க தேவையில்லை. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல், தனி நபர் மூன்றாம் நபர் தகவல்கள், காவல் புலனாய்வு போன்ற தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.

தகவல் அளிப்பவர் யார்?

அனைத்து நரசு துறைகளும் போது தகவல் அலுவலரை நியமித்து அது குறித்த தகவல்களை பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

தகவல் பெற கட்டணம் ரூ.10 இதை ரொக்கமாகவோ, நீதி மன்ற வில்லையகவோ ஒட்டுவதன் மூலமாகவோ, வங்கி வரைவோலை, இந்திய போஸ்டல் ஆர்டர் மூலமாகவோ செலுத்த முடியும். ரயில்வே துறையில் தகவல் பெற ரூ.10 ஒவ்வொரு நிமிடத்துக்கு ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.

கேட்க கூடிய தகவல் அதிக பக்கங்களை கொண்டதாக இருக்கும் பொது தகவல் கேட்பவர் பக்கத்துக்கு ரூ.2 செலுத்த வேண்டியிருக்கும்

. தகவல்களை சி.டி., பிளாப்பி வடிவில் நகல எடுத்தது பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். வறுமை கோட்டிற்குகீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மாதிரி கடிதம்

உங்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் வழிமுறை தெரியவில்லை? தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் உங்கள் அனைத்து சிக்கலும் தீர்வு காண முடியும். பின்வரும் மாதிரி விண்ணப்பத்தில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்துங்கள். சந்தேகங்களை கேட்டறியுங்கள்.

தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்

ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்

அனுப்புநர்:

தங்கள் முழு முகவரி

பெறுநர்:

பொது தகவல் அலுவலர் அவர்கள் ,

மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம்,

................மாவட்டம்.

வணக்கம்,

பொருள்: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக

1) புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவலகத்தில், யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.

2) குடும்ப அட்டைக்கு விண்ணபிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவலகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்க்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவளவு என்று தெரிவிக்கவும்

3) குடும்ப அட்டை பெற விண்ணபிக்கும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணபத்துடன் இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.

4) குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் குடும்பத்தை வழங்கப்படும்? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கபடவில்லைஎன்றால் அதற்க்கு முழு பொறுப்பு யார் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.

5) குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவலகத்திற்கு வந்திருப்பதை விண்ணப்பதாரருக்கு எவ்வாறு தெரிவிக்க படும் ( எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா) என்ற விவரம் தெரிவிக்கவும்.

6) குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.

7) ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால் (நகல் ஏதும் இல்லை என்றால்) புதிய குடும்பட்டை பெற எந்த அலுவலகத்தில் எந்த அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்? அப்படி விண்ணபித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்பட்டை கிடைக்கும். அது பற்றி தகவல் தரவும்.

8) ஒரு ஆண்(அ) பெண் தன்னுடைய பெயரை குடும்ப அட்டையிலுருந்து நீக்கம் செய்து பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? இதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?

9) ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும்? அப்புகார் மீது நடவடிக்கை எடுக்காதபட்சதில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர் முகவரி தெரிவிக்கவும்.

10) எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.

11) நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றால் எந்த பிரிவின்கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கவும்.

12) எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமானத்தின் அடிப்படையில் உள்ளதா அல்லது  மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா என்ற விவரம் தெரிவிக்கவும்.

நான் மேலே கூறிய தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் தகவல் தொடர்புடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கின்றேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக 10 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லையை ஒட்டியுள்ளேன். மேலும் தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியிருப்பின், எத்தனை பக்கங்கள், அதற்க்கு பணம், எந்த தலைப்பில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்ததால், அதை நான் செலுத்த தயாராக உள்ளேன்.

இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பித்து குடும்ப அட்டை பெறுவதற்கான தகவலை அறிந்து கொள்ளலாம்

MOBILE

சரவணன்