சுலபமாக செய்யலாம் சுயதொழில் படிக்காதவர்களுக்கும் தொழிற்பயிற்சி!

எந்தத் தொழிற்பயிற்சியாக இருந்தாலும் சரி, வங்கிக் கடன் என்றாலும் சரி... குறைந்தது பத்தாம் வகுப்பாவது கல்வித் தகுதி கேட்பார்கள். ஆனால், ‘படிப்பே தேவையில்லை... ஆர்வம் இருந்தால் வாருங்கள்...

கைத்தொழில் கற்று கடனும் பெற்று வாழ்வில் உயருங்கள்’ என்கிறது மத்திய அரசின் மக்கள் கல்வி நிறுவனம். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல், திருச்சி, மதுரை, திருவாரூர், சிவகாசி, நாகப்பட்டினம், குன்றக்குடி, ராமநாதபுரம் என 10 மாவட்டங்களில் இயங்கி வருகிறது இந்த ‘மக்கள் கல்வி நிறுவனம்’. இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் பற்றி நிறுவன இயக்குனர் தங்கவேலிடம் விரிவாகப் பேசினோம்...

‘‘உழைப்போர் பல்நோக்குக் கல்வி நிறுவனம் (SHRAMIK VIDYAPEETH) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட அமைப்பு. பொருளாதார பிரச்னைகளால் உண்டாகும் குற்றங்களைக் குறைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது சென்னையில் 1982ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2004ம் ஆண்டு, இது ‘மக்கள் கல்வி நிறுவனம்’ (யிகிழி ஷிபிமிரிஷிபிகிழி ஷிகிழிஷிஜிபிகிழி) எனப் பெயர் மாற்றப்பட்டது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை, எளிய, படிப்பறிவில்லாத மக்கள், பெண்கள், புறக்கணிக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், விதவைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு திறன் சார்ந்த தொழிற்கல்வி அளிப்பதே எங்கள் நோக்கம். தையற்கலை, பூ வேலைப்பாடுகளில் தொடங்கி கணினி பழுது பார்த்தல் வரை வேலைவாய்ப்புக்கு உத்திரவாதமளிக்கும் தொழிற்கல்வி பயிற்சிகள் அந்தந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது. எங்களை நாடி வரும் மக்களுக்கு பயிற்சியளிப்பது மட்டுமல்லாமல் நாங்களே மக்களைத் தேடிச் சென்று பயிற்சி அளிப்பது எங்களின் சிறப்பம்சம்’’ என்றவர், அந்த வழிமுறையையும் விளக்கினார்.

‘‘சென்னைதான் தலைமை அலுவலகம் என்றாலும், தமிழகம் முழுவதும் எங்களுக்கு களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவும் எங்கள் தொடர்பில் உள்ள என்.ஜி.ஓக்கள் மூலமாகவும் தமிழகம் முழுக்க ஆய்வு செய்கிறோம். அதன்மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கே 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்களில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒன்றுபடுத்துகிறோம். பின்பு அந்தப் பகுதிகளில் உள்ள என்.ஜி.ஓ அல்லது சேவை அமைப்புகள் மூலம் பயிற்சி மையங்களை உருவாக்கி அங்கேயே அவர்களுக்குப் பயிற்சிகளை அளிக்கிறோம்.

குறைந்தது 20 நபர்கள் இருந்தால் போதும்... நாங்கள் தேடி வந்து பயிற்சிகளை வழங்குகிறோம். சென்னையில் மட்டும் தலைமை அலுவலகம் தவிர, 25 எக்ஸ்டன்ஷன் சென்டர்களில் இது போன்ற பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தந்தப் பகுதிகளில் எந்தத் தொழிற்பயிற்சி வழங்கு வது பொருந்தும் என்பதையும் தேர்ந்தெடுத்துதான் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சுமார் 35 தொழிற்பயிற்சிகள் இங்கே வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை 3 முதல் 6 மாத காலப் பயிற்சிகளே. தினம் இரண்டு மணிநேரமே பயிற்சி. பயிற்சி இலவசம் என்றாலும் மத்திய அரசின் சான்றிதழுக்காக குறைந்த கட்டணமாக 150  - 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பை முடிப்பவர்களுக்கு கூடுதலாக, ‘வாழ்க்கைத் தர மேம்பாட்டு பயிற்சி’யும் இங்கே வழங்கப்படுகிறது. உதாரணமாக, ‘ஒரு டெய்லர் கஸ்டமரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... தொழில் மேம்பாட்டுக்கு என்ன மாதிரியான விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்’ என்றெல்லாம் வழிகாட்டும் பயிற்சி இது. மேலும், சிறு அளவிலான வங்கிக் கடன் வாங்குவது, சுயதொழில் துவங்குவது என பல வழிகாட்டுதலை நாங்கள் பயிற்சியோடு வழங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இங்கே குறைந்தபட்சம் 3,500 பேர் பயிற்சி பெற்று கைத்தொழில் நிபுணர்களாகிறார்கள்.

மறுவாழ்வு மையங்களிலும், சிறைகளிலும், சீர்திருத்தப் பள்ளிகளிலும் கூட எங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கணினிப் பயிற்சிக்கு மட்டும்தான் பத்தாம் வகுப்பு தகுதி. மற்ற எல்லா பயிற்சிகளுக்கும் மூன்றாம் வகுப்பு கூடப் போதும். எங்கள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று, மத்திய அரசின் சான்றிதழைப் பெறலாம். இந்தச் சான்றிதழின் உதவியோடு வங்கிக் கடன் பெற்று சுயதொழில் தொடங்கி வாழ்வில் வளம் பெறலாம்’’ என்றார் தங்கவேல். ‘பொன் வைக்கும் இடத்தில் பூ’ என்பது போல, கல்விக்கு பதிலாக கைத்தொழிலை வைத்து நம்மை முன்னேற்றும் முயற்சி இது. பயன்படுத்திக் கொள்வோமே!


இங்கு வழங்கப்படும் சில தொழிற்பயிற்சிகள்
1. தையல் கலை பயிற்சி 4 மாதம்
2. தையல் பூ வேலைப்பாடு 4 மாதம்
3. துணியில் வண்ணம் தீட்டுதல் 3 மாதம்
4. சணல் பொருட்கள் தயாரித்தல் 3 மாதம்
5. அழகு கலைப் பயிற்சி 3 மாதம்
6. துரித உணவு தயாரித்தல் 3 மாதம்
7. பேக்கரி தொழில் பயிற்சி 3 மாதம்
8. வீட்டுக்கு தேவையான உணவுப்பொருட்கள் 3 மாதம்
9. இயந்திர தையல் பூ வேலைப்பாடு 3 மாதம்
10. கைவினைப் பொருட்கள் தயாரித்தல் 3 மாதம்
11. போட்டோ எடிட்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் 3 மாதம்
12. வெல்டிங்6 மாதம்
13. ஸ்கிரீன் பிரின்டிங் செய்தல்    3 மாதம்
14. எலெக்ட்ரிஷியன் டெக்னிஷியன் 6 மாதம்
15. ஏர்கண்டிஷன், ரெஃப்ரிஜிரேஷன் தொழில்நுட்பம் 6 மாதம்
16. இருசக்கர வாகனம்
பழுதுபார்க்கும் பயிற்சி 6 மாதம்
17. பிளம்பிங் 6 மாதம்
18. கணினி பயிற்சி (வி.ஷி.ளிதிதிமிசிணி, ஜிகிலிலிசீ, ஞிஜிறி) 3 மாதம்
19. கணினி பழுது நீக்கும் பயிற்சி 3 மாதம்
20. மோட்டர் ரீவைண்டிங் 3 மாதம்

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’

மிகவும் வறுமை நிலையிலுள்ள வர்களின் வறுமை நிலையை அகற்றுவதற்கு ஜெயலலிதாவின்  முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2005ம் ஆண்டு, புதுவாழ்வு திட்டம் என்ற ஒரு திட்டம் துவக்கப்பட்டது. இது உலக வங்கியின் நிதி உதவியுடன் அப்போது துவக்கப் பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் 120 ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டது.  
அதை தொடர்ந்து வறுமை நிலையிலுள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதற்கு தமிழகத்தின் ஏனைய 265 ஊராட்சி ஒன்றியங்களிலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளை உள்ளடக்கிய 31 மாவட்டங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
ஏழை மக்களுக்கான அமைப்புகளை உருவாக்குதல், அவற்றின் மூலம் ஏழை மக்கள் நிதி ஆதாரங்கள் பெறுதல், வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகள், பொதுச் சேவைகள், அரசால் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் ஆகியவற்றை பெற்று தருவதில் இந்த இயக்கம்  முனைப்புடன் செயல்படுகிறது. 
இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு மாநில, மாவட்ட, வட்டார, தொகுதி அளவில் தனி நிர்வாக அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கம் 2012 - 2013 ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக இந்த இயக்கத்தின் திட்டங்களை செயல்படுத்த கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 2323 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை அமைக்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது.  இதற்காக ரூ.232 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மக்களின் நிலையை ஆய்வு செய்யும். அதன் மூலம் ஏழைகள், மிகவும் ஏழைகள், நலிவுற்றோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் கண்டறியப்படுவர். இவர்களின் வாழ்வதாரம் உயரவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும், சமூகத்தில் உயரிய நிலையை அடையவும், சொந்தத் தொழில்புரியவும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் உதவிடும். 
ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.  அதன்படி அனைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் தற்போது செயல்பட்டு வருகிறது.
தொழில் செய்ய விருப்பம் உள்ள பெண்கள், தொழில் தொடங்க வங்கி மூலம் கடன் பெற உதவி செய்யும் பணியும் இச்சங்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. அதே போன்று பெண்களை கொண்டு குழு அமைத்து அவர்களுக்கு தொழில் கூடம், மின்சாரம், சந்தை வசதி போன்றவையும்  ஏற்பாடு செய்து தரப்படுகிறது. மேலும் தொழில் குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே எந்த வருமானமும் இல்லாமல் இருந்தவர்கள்,  தொழில் குழு உறுப்பினர்களாக ஆன பின்னர் ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை வருமானம் பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும்  தலா ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு உள்ளது.   கிராம அளவிலான அடிப்படை விபரம், குழுக்கள் விவரம், நலிவுற்றோர் விவரம்,  கணக்கு பதிவேடுகள் பற்றிய விவரம் போன்றவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிராம அளவிலான ஊராட்சி விவரங்களை அறிந்து கொள்ள முடியும். 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தொலைநோக்கு திட்டத்தில் அனைத்து பிரிவு மக்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை முக்கிய குறிக்கோளாக வலியுறுத்தியிருக்கிறார். அக்குறிகோளை அடையும் வகையில் கிராம மக்களின் வாழ்வுநிலை மேம்பாடு அடைய,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை நிறுவுவதற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த சங்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதால் இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் அதாவது கிராம மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கலாம்.

தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’

கல்லாத பேரை எல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில்தான் இன்பம் என் தோழா....
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் மிகவும்குறைவாக  இருந்தது. அதேபோல் தொழிற்கல்வி கற்றவர்களின் சதவீதமும் மிக்குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது. இம்மாற்றத்துக்கு காரணம் அவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான்.
எனினும் ‘நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மக்கள்’ என்ற இலக்கை இந்தியா இன்னும் அடையவில்லை. மேலும் தொழிற்கல்வி பெற்றவர்களின் சதவீதமும் குறைவாகத்தான் உள்ளது. எனவே தான் ‘கற்கும் பாரதம்‘ திட்டம் தொடங்கப்பட்டது.
மக்கள் கல்வி நிறுவனம்
தொழிற்கல்வியை வழங்கிவரும் மக்கள் கல்வி நிறுவனம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே.
இக்கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். மக்கள் கல்வி  நிறுவனத்தின் முக்கிய நோக்கமே தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு தொழிற்கல்வி அளித்து அவர்களை பொருளாதார ரீதியாக மேம்பாடு  அடையச் செய்வதுதான்.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நம் நாட்டில் 26 கோடி (15 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மக்கள்  கல்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் பெண்களின் சதவீதம் மிகவும் அதிகம். எனவேதான், ‘கற்கும்பாரதம்‘ திட்டம் பெண்களை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் கல்வி கற்கும் வயதைத் தாண்டியோர் , கல்வி பயிலாத பெண்கள் ஆகியோருக்கு புதுமையான கல்வி அளிக்க ‘கற்கும் பாரதம்‘ திட்டம் வழிவகை செய்துள்ளது. கல்வி அறிவையும் எழுத் தறிவையும் வளர்ப்பது தான் இத்திட்டத்தின்  முக்கிய நோக்கம் என்பதை மேலேயே பார்த்தோம். அதே போல மக்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தொழிற்சார்ந்த கல்வி அளிப்பதாகும்.
தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொழிற்கல்வி பயில எவ்வளவு செலவாகும் என்பதை நாமறிவோம். வசதி உள்ளவர்களால் முறையாக பள்ளிக் கல்வி பயின்று நிறைய செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களில் பயில இயலும்.
ஆனால் பள்ளிக்கல்வியையே முறையாக முடிக்காத ஏழைகளால் செலவு செய்து எப்படி தொழிற்கல்வி பயில இயலும்? இவர்களுக்காக உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் மக்கள் கல்வி நிறுவனம்.  
இந்நிறுவனம் வழங்கும் தொழிற்கல்வியால் பயனடைந்தவர்கள் ஏராளம். ஏராளமான இளைஞர்களுக்கும், மகளிருக்கும் கைத்தொழில் முதல் கணிப்பொறிவரை பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்கியிருக்கிறது. அத்துடன் அவர்களுக்கு வேலைவாய்ப் பிற்கும் வழிகாட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் கிடைக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)

 தமிழ்நாட்டில் அதிக தொழில் முனைவோரை உருவாக்க New Entrepreneur -cum- Enterprise Development Scheme-NEEDS (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்) என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் ரூ.5 இலட்சத்திற்கு மேலும் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு மானிய உதவியாக தொழில் திட்ட மதிப்பீட்டில்25 விழுக்காடும் அதிகபட்சமாக 25இலட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
தொழிலின் திட்ட மதிப்பு (Levels Of Funding Under NEEDS):
  தொழிலுக்கான திட்ட மதிப்பு ரூ.5 இலட்சத்திற்கு மேலும் ரூ.1 கோடி வரையிலும் (The minimum Project Cost will be above Rs.5.00 Lakhs and the maximum Project Cost will be Rs.1.00 Crore) இருந்தால் அதற்கான முதலீட்டை NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டதின் மூலம் பெறலாம்.
அரசு மூலதன மானியம்(Rate of Subsidy) :
   NEEDS திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானிய (Subsidy) உதவி தொழிலின் திட்ட மதிப்பில் (Project Value) 25% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும்.
தொழில் முனைவோர் சொந்த முதலீடு (Promoter’s Contribution):
  • பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) குறைந்தபட்சம் 10% விழுக்காட்டை தொழிலில் முதலீடு (Investment) வேண்டும்.
  • சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை தொழிலில் முதலீடு (Investment) வேண்டும்.
வயது மற்றும் வருமான வரம்பு (Age Limit & Income ceiling):
 NEEDS  (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் பயனடைய 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருப்பின் 35 வயதிற்குள்ளும், சிறப்புப்பிரிவினராக இருப்பின் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
வருமான வரம்பு ஏதும் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் இல்லை. எல்லா வருமான வரப்பினரும் விண்ணபிக்கலாம் (There will be no income ceiling for assistance for setting up projects under NEEDS).
கல்வித் தகுதி (Academic Qualification):
   பட்டப்படிப்பு (Degree), பட்டயப் படிப்பு (Diploma), I.T.I, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சிகளைப் (Vocational Training from recognized Institutions) பெற்றவர்கள் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) மூலம் பயன் அடையலாம்.
சிறப்புப் பிரிவினர் (Special category):
  ஆதி திராவிடர், மகளிர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள் ஆகியோர் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) சிறப்புபிரிவு தொழில் முனைவோர்களுக்கான சலுகைகளை பெறத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள் (Implementing Agencies):
  NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையத்தை (DIC-DISTRICT INDUSTRIES CENTRES) அணுகி விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.
கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution):
   NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)  திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.
NEEDS திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களும்,தொழில்களும் (Negative List of Activities):
  • மத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன் கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் NEEDS திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.
  • தொழில் முனைபவர் தமிழ் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும் (The applicant should be a resident of Tamil Nadu State for not less than 3 years).
  • வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை,மளிகை கடை, பொருட்களை வாங்கி, விற்கும் தொழில்) தொடங்க NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.
  • படித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு NEEDS மூலம் முதலீட்டை பெற இயலாது.
  • இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள் (Meat(slaughtered),i.e.processing, canning and/or serving items made of it as food), போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள் (Beedi/Pan/ Cigar/Cigarette etc),தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு (Horticulture, Floriculture, Animal Husbandry like Pisciculture, Piggery, Poultry), மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் பயன் பெற இயலாது.
  • கடனுதவி பெற தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைபவர் ஒரு மாத தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை கட்டாயமாகப் பெறவேண்டும்.

சுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட தொழில் மையங்கள்.
இந்த மையங்களின் உதவி யால் சுயதொழில் தொடங்கி மு ன்னேறியவ ர்கள் த மி ழ க த் தி ல் ஏராளம். சிறும ற் று ம் கு று தொழிற் சாலைகள் தமிழகத்தில் ஏராளமாக பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்களும் முக்கிய காரணம்.
படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின் கீ ழ், இ ய ங் கி வ ரு ம் மாவட்ட தொ ழில் மையமானது, புதிய
தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சியை வழங்குவதோடு தொழி ல் ஆலோசனைகளையும் வழங்குகிறது.
தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம். எனவேதான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துவதும் இம்மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இதன்மூலம், படித்த இளைஞர்கள் திசைமாறி செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மை யத்தை அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை, திட்டஅ றிக்கை இவை
வழங்கப்படுவதோடு உரிய பயிற்சிக்கும் வழிவகை செய்யப்படுகிறது.
சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் பணியை மாவட்டத்தொ ழி ல் மையங்கள் சிறப்பாக செய்து வருகின்றன.
அதேபோல கைவினைத் தொழில், குடிசைத்தொழில் இவற்றை ஊக்கப்படுத்துவதற்காக, இத்தொழிலை மேற்கொள்பவர்கள் தங்கள் தொழிலை நிறுவனமாக பதிவு செய்கொள்ளும் வசதியையும் மாவட்டத்தொழில் மையம் ஏற்படுத்தி தந்துள்ளது.
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய திட்டங்களன் கீழ்சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் பெறுவதற்கு,\ மாவட்டத் தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது.
தமிழக அரசின், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்சுயதொழில்தொடங்க
வழங்கப்படும் வங்கிக் கடனில் 1 5 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத் தொழில் மையம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. அந்தந்தமாவட்ட தலை நகரத்தில் இம்மையம்
அமைந்திருக்கும். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும்.
மாவட்டத் தொழில் மையத்தின் முக்கியபணிகள் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை வரிசைப்படுத்திப் பார்ப்போம்.
1) பதிவு செய்தல்
2) இணையதளம் மூலம் பதிவு செய்தல்
3) தொழில் முனைவோருக்கு குறிப்பாணை
வழங்குதல்
4)குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ்
வழங்குதல்
5) கைத்தொழில் பதிவுச் சான்றிதழ்
வழங்குதல்.
6)ஒ ற்றைச்சாள ர முறையில் தொ ழில் முனைவோருக்கு சேவை அளித்தல்
7) ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துதல்
8) உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல்
9) வங்கிகளில் கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை அளித்தல்
10)ஏற்றுமதிக்கு வழிகாட்டுதல்
11)சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்
12)தொழில் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல்
இப்படி ஏராளமான பணிகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாவட்டத் தொழில் மையத்தின் சேவைகளை படித்த வேலையில்லாத இ ளைஞர்கள் ப யன்படுத்திக் கொள்ளவேண்டும்.