VAO விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை
விண்ணப்பத்தினை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும். விண்ணப் பத்தில் உள்ள கட்டங்களினுள் எழுத, நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனாவினை உபயோகிக்கவும். பின்னர் உரிய இடங்களைக் கருமையிட ஐஇ பென்சிலை பயன்படுத்தவும். விண்ணப்பத்தின் அனைத்து பதிவுகளும் ஆங்கிலத்தில் (பெரிய எழுத்தில்) இருக்க வேண்டும்.
1. விண்ணப்பிக்கும் தேர்வின் பெயர் : TNPSC- VAO
1. (a) விளம்பர எண்: 248
2. விண்ணப்பதாரரின் பெயர் : ஆங்கிலத்தில் (பெரிய எழுத்துக்களில்) அதற்கென கொடுக்கப்பட்ட பெட்டிகளில் எழுத வேண்டும். பெரியதை முதலிலும், தலைப்பெழுத்தைப் பெயருக்கு பின்புறம் எழுதி உரிய பெட்டிகளின் கீழே கொடுக்கப் பட்டுள்ள கட்டங்களை HB பென்சிலைக் கொண்டு கருமையாக்கிக் காட்ட வேண்டும்.
3. தேர்வு/ பணிக்குறியீடு : 050
4. தேர்வு மையக் குறியீடு : தகவல் சிற்றேட்டில் பக்கம் 17-ல் உள்ள பிற்சேர்க்கை 1-ல் Name of Centres and Centre Codes என்ற தலைப்பின் கீழ் உள்ள தேர்வுமையங்களில் விரும்பிய ஒன்றை தேர்வு செய்து, அத்தேர்வு மையத்திற்குரிய குறியீட்டு எண்ணைக் கண்டு பிடித்து, அவ்வெண்ணை உரிய கட்டங்களில் எழுதிக் கீழேயுள்ள அதற்குரிய எண்களைக் கருமையாக்கவும்.
5. பிறந்த தேதி : சரியான பிறந்த தேதியை குறிப்பிடவும்.
6. மதம் : இந்து என்றால் 1, முஸ்லீம் என்றால் 2, கிறிஸ்துவர் என்றால் 3, மற்றவர்கள் 4 என பெட்டியில் பேனாவினால் எழுதி அதற்குரிய கட்டங்களில் பென்சிலால் கருமையாக்கவும்.
7 வகுப்பு : Others ( (மற்றவை) என்றால் 1 எனவும், SC என்றால் 2 எனவும், SC (A)என்றால் 3 எனவும், ST என்றால் 4 எனவும், MBC என்றால் 5, DC என்றால் 6, BC என்றால் 7 எனவும், BC (M)என்றால் 8 எனவும் எழுதி அதற்குரிய கட்டங்களை பென்சிலால் கருமையாக்கவும்.
7 (a) உட்பிரிவு பட்டியல் எண்: வகுப்பு உட்பிரிவு பட்டியல் எண்ணை/பணி போட்டி யாளர்களுக்கான விதிமுறைகளில் காண்க.
8. பாலினம் : ஆண்களாக இருந்தால் Male கட்டத்தையும், பெண்களாக இருந்தால் Female என்ற கட்டத்தையும் பென்சிலால் கருமையாக்கவும்.
9. ஆதரவற்ற விதவை : ஆதரவற்ற விதவை என்றால் Yes-க்கு நேரான கட்டத்தையும், இல்லையென்றால் No-க்கு நேரான கட்டத்தையும் கருமையாக்கவும்.
10. முன்னாள் ராணுவத்தினரா? ஆம் அல்லது இல்லை.
11 உடல் ஊனமுற்றவரா? ஆம் அல்லது இல்லை.
12 தட்டச்சு/சுருக்கெழுத்தர் தகுதி : பூர்த்தி செய்ய தேவையில்லை,
13. தகப்பனார் பிறந்த இடம் : உங்கள் தகப்பனார் பிறந்த இடம் தமிழ்நாடு எனில் 1. Tamilnadu என்ற கட்டத்திற்கு நேராகவும், தமிழ் நாட்டை தவிர வேறு மாநிலமாக இருந்தால் 2. Other than TN என்ற கட்டத்திற்கு நேராகவும் கருமையாக்கவும். இந்திய குடிமகன் இல்லை எனில் 3. Other than India என்ற வார்த்தைக்கு நேராக உள்ள கட்டத்தை கருமையாக்கவும்.
13. (a) நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் தகவல் சிற்றேட்டில் பக்கம் 17-ல் பிற்சேர்க்கை 1-ல் Name of District and Districts Codes என்ற தலைப்பிற்கு கீழேயுள்ள மாவட்டத்தில் உங்கள் மாவட்ட குறியீட்டு எண்ணை தேர்வு செய்து எழுதவும்.
14. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி பெற்றுள்ளீரா? ஆம் எனில் வங்ள் என்ற வார்த்தைக்கு நேரான கட்டத்தையும், இல்லையெனில் சர் என்ற வார்த்தைக்கு நேரான கட்டத்தையும் கருமையாக்கவும்.
14. (a) நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிய முன் அனுபவம் பெற்றுள்ளீரா?
இல்லை என குறிப்பிடவும்.
14. (b) உயர்ந்த பொதுக் கல்வித் தகுதி
கல்வித் தகுதியை குறிப்பிடவும்.
14. (c) நிரப்பத் தேவையில்லை.
14. (d) நிரப்ப தேவையில்லை.
15. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி : இறுதிப் பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியே குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதி தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியாகக் கருதப்படும். ஏதேனும் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் நிலுவையிலிருப்பின் நிலுவைத் தாள்கள் உட்பட அனைத்துத்தாள்களிலும் தேர்வு எழுதி அவற்றின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியே குறிப்பிடப் பட்டுள்ள கல்வி தகுதி தேர்வு அறிவிக்கப்பட்ட தேதியாக எடுத்துக் கொள்ளப்படும். பத்தாவது மதிப்பெண் பட்டியலில் உள்ள தேதி.
15. a பூர்த்தி செய்யத் தேவையில்லை.
16. பெயர் மற்றும் விண்ணப்பதாரரின் விலாசம் : விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரியை (ஆங்கில பெரிய எழுத்துக்களில்) எழுதவும். பிறந்த இடத்தை எழுதவும். INDIAN என்று எழுதவும். வசிக்கும் இடத்தின் பெயர் எழுதவும். உங்கள் தாய்மொழி எந்த மொழியோ அந்த மொழியையும், தகப்பனார் பெயர் கணவர் பெயர் எழுதவும். இவை அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் எழுதவும். அருகில் உள்ள கட்டத்தில் உங்களுடைய புகைப்படத்தை ஒட்டவும்.
17. தமிழில் கல்வித்தகுதி : SSLC , HSC என குறிப்பிடவும்.
18. தேர்வுக்கட்டண விவரம்: தகவல் சிற்றேடு பிற்சேர்க்கை பட்டியலிடப்பட்டுள்ள அஞ்சலகங்களில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தின் மூலமாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தியதற்காக பெறப்பட்ட அஞ்சலக பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் உறுதிமொழி (Declaration) பகுதிக்கு ஆதி திராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை ஆகியோர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவை யில்லை. இதற்கு முன்னர் மூன்று முறை தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறாத பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர்.
19. தற்போதைய முகவரியின் அஞ்சல் எண்: உங்களின் முகவரி அஞ்சல் எண்ணை குறிப்பிடவும்.
20. வயதுவரம்பு சலுகை கோருகிறீர்களா? ஆம் அல்லது இல்லை.
21. கட்டண விலக்கு கோருகிறீரா? : இலவசச் சலுகை இம்முறையும் சேர்த்து எத்தனை முறை பயன்படுத்தியுள்ளீர்?, எவ்வகையின் கீழ் கட்டண விலக்கு கோரியிருக்கிறீர்கள் என்பதை பார்க்கவும்)
21. (a) இலவச சலுகையை எத்தனை முறை பயன்படுத்தியுள்ளீர்? பயன்படுத்தி இருந்தால் எத்தனைமுறை பயன்படுத்தியுள்ளீரோ அதற்கு நேரான எண்ணிற்கு உரிய கட்டத்தைக் கருமையாக்கவும். மூன்று தடவைக்கு மேல் இச்சலுகையை பயன்படுத்தும் SC, ST , ஆதரவற்ற விதவை, உடல் ஊனமுற்றோர் பிரிவினர்கள் 4 என்ற கட்டத்தைக் கருமையாக்கவும்.
21. (b) எவ்வகையின் கீழ் கட்டண விலக்கு கோருகிறீர்கள் : என்ற விவரத்திற்கு கீழ் உள்ள கட்டத்தில் SC/Sc(A) என்றால் 1 எனவும், ST என்றால் 2 எனவும், MBC/DC என்றால் 3 எனவும், BC. (Bc(m)என்றால் 4 எனவும், PH என்றால் 5 எனவும், Ex.service Man என்றால் 6 எனவும், DW எனில் 7 எனவும் கட்டத்தில் எழுதி கீழே உள்ள கட்டத்தை கருமையாக்கவும்.
22. தேர்வுக்கு தேர்ந்தெடுக்கும் பாடங்கள் : கட்டாயபாடம் பொதுத் தமிழை தேர்ந் தெடுத்தால் 1 எனவும், பொது ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தால் 2 எனவும் பெட்டியில் எழுதி அதற்குரிய கட்டத்தை கருமையாக்கவும். விருப்பப்பாடம் 1 மற்றும் விருப்பப்பாடம் 2 ஆகிய கட்டங்களை நிரப்பத் தேவையில்லை.
23. துறை ஒழுங்கு நடவடிக்கை : ஆம் அல்லது இல்லை. 2
3. (a)குற்றவியல் நடவடிக்கை ஆகியவற்றுக்கு பெரும்பாலும் சர் கட்டங்களை கருமையாக்கவும் (குற்றப் பின்னணியில் இல்லையெனில்)
23. (b)நேர்காணலுக்கு சென்றிருந்தால் வங்ள் எனவும், இல்லையெனில் சர்
23. (c) அரசியல் பங்கேற்பு :
பெரும்பாலும் NO கருமையாக்கவும் (அரசியல் பங்கேற்பு இல்லையெனில்)
24. பதவி முன்னுரிமை : பூர்த்தி செய்யத் தேவையில்லை.
25. முந்தைய / தற்போதைய / நிலையான / தற்காலிகப் பணி : அரசுப் பணியில் இருந்தால் குறிப்பிடவும். இல்லையெனில் பூர்த்தி செய்யத் தேவையில்லை.
25. (a) முந்தைய நேர்காணல்/ எழுத்துத் தேர்விற்கான வருகை விவரம் இருந்தால் தெரிவிக்கவும்.
26. இணைத்து அனுப்ப வேண்டிய சான்றுகள் சரிபார்க்கும் பட்டியல்: விண்ணப்ப படிவத்துடன் எவற்றையெல்லாம் இணைத்து அனுப்புகிறீர்களோ அதற்கு நேராக உள்ள கட்டத்தை கருமையாக்கவும்.
1. உறுதிமொழிக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள இடத்தில் தேர்வு கட்டணம் செலுத்தியதற்குரிய அஞ்சலக பற்றுச்சீட்டை ஒட்டவேண்டும். அதற்கு அருகில் உள்ள கட்டத்தில் கையெழுத்து இட வேண்டும். அஞ்சலக பற்றுச்சீட்டு ஒட்டாத கையெழுத்து இடப்படாத விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
2. பிறந்த தேதிக்கான சான்று (கல்விச் சான்று)
3. சாதி சான்றிதழ்
4. கல்வித் தகுதிக்கான சான்று
15. போதிய தமிழறிவு பெற்றிருப்பதற்கான சான்று
18. ஒரு A அல்லது B பிரிவு அரசு அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைச் சான்று
19. இறுதியாக படித்து முடித்த அல்லது படித்துக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று.
20. உடல் தகுதிச் சான்று (Fitness Certificate)
21. ஒரு மருத்துவ அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பதாரரின் உடல் ஊனத்தின் அளவு சதவீகிதத்தில் குறிப்பிடப் பட்டு, அந்த உடல் ஊனம் அவர் தனது பணிகளை திறம்பட ஆற்ற எவ்விதத்திலும் தடையாக இருக்காது என்பதை காட்டும் சான்றிதழ்.
23. முன்னாள் ராணுவத்தினராக இருப்பின் அதற்கான சான்று
குறிப்பு : விண்ணப்பதாரர் எந்தவொரு மூலச்சான்றிதழையும் (Original Documents) அனுப்பக்கூடாது. நகல் அச்சு (ஜெராக்ஸ்) எடுக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை (உறுதிச்சான்று அளிக்கப்பட்டவை) மட்டுமே விண்ணப்பத்துடன் அனுப்பிவைக்க வேண்டும். A அல்லது B பிரிவு அரசு அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட சான்றுகளின் நகல்கள் இவ்வலுவலகத்தில் பெறப்படவில்லை எனில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
No comments:
Post a Comment