100 ரூபாயில் ஏழே நாட்களில் ரேஷன் கார்டு:
தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்
வெறும் இருப்பிட ஆதாரத்திற்காக மட்டும் ரேஷன் கார்டு வேண்டுவோர், ரேஷனில் எந்த பொருளும் தேவைப்படாதவர்கள்,‘தத்கல்’ முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் போட்டோவுடன் பூர்த்தி செய்து, கருவூல கணக்கில் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
இருப்பிட முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்து, ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஏழு நாளில் வெள்ளை நிறத்திலான ரேஷன் கார்டு வழங்கப்படும். இவற்றை பொருட்கள் பெறும் கார்டாக மாற்றம் செய்ய முடியாது என, அரசு தெரிவித்துள்ளது