கல்வி உதவி

பள்ளி படிப்பு
 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.

பட்ட படிப்பு
1. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ. 1000 வரை கிடைக்கும்.
2. பட்டபடிப்பை பொருத்தவரையில் தமிழக அரசு முஸ்லீம்களுக்கென்று தனியாக இதுவரை எந்த கல்வி உதவி தொகை திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை வழங்குகின்றது. படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.1000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது இதை பெருவதும் அவ்வளவு சிரமம்மில்லை, ஒவ்வொறு கல்லூரியிலும் இதற்க்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படும், அதை வாங்கி பூர்த்தி செய்துகொடுத்தாலே போதும், பெரும்பாலும் நமது சமுதாயம் இதை பெற்றுகொள்கின்றது. இந்த கல்வி தொகை பெற தாஸில்தாரிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும், வருமான சான்றிதழ் பெருவதற்க்கு அலுப்புபட்டு கொண்டு நமது சமுதாய மாணவர்களில் சிலர் இதை பெருவதில்லை.
3. மத்திய அரசு (தமிழக அரசுடன் இணைந்து) தொழில் கல்வி (ITI, Diploma, B.E/B.Tech, M.E/M.Tech) படிக்கும் சிறுபாண்மை (முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர்) மாணவர்களுக்காக சிறப்பான இலவச கல்வி உதவி தொகை திட்டத்தை அமல் படுத்தி வருகின்றது (வருடத்திற்க்கு ரூ.25,000 வரை). விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைக்காது. (மேலும் விபரம் அறிய www.minorityaffairs.gov.in) ஒவ்வொறு வருடமும் அரசு குறிபிட்ட எண்ணிக்கையில் உதவியை வழங்குகின்றது. இந்த எண்ணிகை மிக மிக குறைவு, நாம் கணகிட்ட வரை 200 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் இருக்கும். இதில் இன்னோறு சிக்கல் இதை பெருவதாக இருந்தால் மேலே குறிபிட்ட தமிழக அரசு உதவி தொகை பெறமுடியாது. இது யாருக்கு கிடைக்கும் என்றால் ஐஐடி, என்ஐடி மாணவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் மத்திய அரசு இங்கு படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றது. மேலும் ஐஐடி, என்ஐடியில் இதை பெருவதற்க்காக சிறப்பான ஏற்பாடும் செய்து வைத்துள்ளனர். ஆனால் கட்டாயம் ரூ.25,000 வரை உதவி தொகை கிடைக்கும் ஐஐடி, என்ஐடியில் முஸ்லீம் மாணவர்கள் மிக மிக குறைவுகல்வி உதவி சம்மதமான முக்கியமான இணைய தளங்கள்
மிழக அரசின் தேர்வுகளுக்குகான இணையம்
www.dge.tn.gov.in/
தேசிய திறன் தேர்வு இணையம்
www.ncert.nic.in
மத்திய அரசின் சிறுபாண்மை நலதுறை
www.minorityaffairs.gov.in
கல்வி உதவிக்கான மத்திய அரசின் இணையதளம்
www.educationsupport.nic.in
பிற கல்வி உதவி சம்மந்தமான தகவல் பெற
www.scholarshipsinindia.com
மேலும் கீழ்க்கானும் தமிழக அரசின் அமைப்புகள் கல்வி உதவி , இலவச பயிற்சி போன்றவற்றை சிறுபாண்மை மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.
1.சிறுபாண்மையினர் நல இயக்கம்
எண்:807, அண்ணாசலை, சென்னை-600002
2.தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதரா வளர்ச்சி கழகம்
எண்:807, அண்ணாசாலை, 5வது மாடி, சென்னை-600002
- ஜஸாகல்லாஹைர் to tntj.net