அரசு இணையதளங்கள்

இந்தியா போர்டல்
தமிழ்நாடு அரசு
இந்திய பாராளுமன்ற மன்றம்
பிரதம மந்திரி அலுவலகம்
இந்தியாவை தெரிந்துகொள்
தேசிய தகவலியல் மையம்
மத்திய அரசு துறைகள்
தேர்தல் ஆணையகம்
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை பார்வையிட
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க
இந்திய உச்ச நீதிமன்றம்
மத்திய புலனாய்வு ஆணையம்
மத்திய தேர்வாணயம்
வருமானவரி துறை
மாநில அரசு துறைகள்(ம)நிறுவனங்கள்
தமிழ்நாடு - கண்ணோட்டம்
தமிழ்நாடு தேர்வாணையம்
ஆசிரியர் தேர்வு
தமிழ்நாடு வரைபடங்கள்
தமிழ்நாடு சுற்றுலா
பதிவு செய்யப்பட்ட தொழிங்சாலைகள்
நிலையான கணக்குஎண் பெறுவதற்கு இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பம் அனுப்புதல்
தேசிய மகளிர் ஆணையம்
இந்திய இரயில்வே

தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியை கணக்கிடுவது எப்படி?

தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியை கணக்கிடுவது எப்படி?


ஆங்கில தேதியைப் பயன்படுத்தும் முறை எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது. அதை தவிர்க்கவும் முடியாது, பயன்படுத்துவதில் தவறும் இல்லை.
ஆனால் இன்றும் தமிழ் தேதியை வெளியில் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, இல்லங்களில்
பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இந்து பண்டிகைகள், திருமண தேதி இவற்றை தமிழில் குறிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ளது.

கல்யாணமா அது மாசி 10ந்தேதி எனச் சொன்னால், நம்மிடம் 2012 நாட்காட்டி இருந்தால் ஆங்கில தேதியை தெரிந்து கொள்ளலாம் . இதுவே ஒரு தேதி என்ன கிழமை எனக் கேட்டால் கணக்கில் மேதாவியாக இருப்பின் ஒரு காகிதமும் பேனாவும் போதும், அல்லது கணிப்பொறியின் உதவியுடன் துல்லியாமாக சொல்லிவிட முடியும்.

கணித சமன்பாடுகள் எதையுமே கணினியில் ஏற்றி வேலைகளை எளிமை படுத்த முடியும். ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரக நிலை முதல் வின்னில் செலுத்தும் செயற்கைகோள் வரை அனைத்தும் கணிதம்தான் என்பதை அறிவோம். இந்த வரிசையில் ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதியும், தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியையும் கணக்கிடும் சூத்திரம் தெரிந்தால் எளிதாக கணினியிலும் ஏற்றி விடலாம். இணையத்தில் இப்பணியைச் செய்து முடிக்க சில இணையதளங்கள் உள்ளன.



http://www.prokerala.com/general/calendar/tamilcalendar.php
http://www.tamil-calendar.com
http://www.barathonline.com/Articles/TamilCalendar2010.htm
http://tamildailycalendar.com/

ஒரே சொடுக்கில் பல்வேறு சமூக தளங்களுக்கு செல்ல..


இன்றைய தேதியில் இணையத்தில் நூற்றுகணக்கான சமூக வலைத்தளங்கள் உள்ளன. இதில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றிற்கு மேற்பட்ட தளங்களில் உறுப்பினர் ஆகி இருப்போம்.சில நேரங்களில் பல்வேறு சமூக தளங்களில் பதிவு செய்துவிட்டு மறந்தும் விட்டிருப்போம்.இப்படி இருக்கையில் நம்முடைய பயனர் கணக்கின் மூலம் எந்தெந்த தளங்களில் நாம் உறுபினராக இருக்கிறோம் என்று நம்முடைய பயனர் கணக்கின் பெயரை உள்ளீடு செய்வதன் மூலம் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம்.

இங்கே 159 சமூக வலைத்தளங்களை பட்டியலிட்டு வைத்துள்ளார்கள்.அதில் நாம் பதிவு செய்யாத தளங்களுக்கு செல்ல, தேவைப்படும் தளத்தினை சொடுக்கி அந்த தளத்தினில் சென்று நமக்கான நமக்கான புதிய கணக்கினை தொடங்கலாம்.மேலும் இந்த வலைப்பக்கத்தை புக் மார்க்கா சேமித்து வைத்து ஒரே சொடுக்கில் தேவைப்படும் சமூக தளங்களுக்கு செல்லலாம்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

உலகின் அனைத்து மொழிகளையும் சுலபமாக பேச

உலகின் அனைத்து மொழிகளையும் சுலபமாக பேசவேண்டுமா



புதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரிடம் நாம் நேரிடையாக பேசினால் போதும் வெகு சீக்கிரத்தில் அந்த மொழியை கற்றுவிடலாம். ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் நேரடியாக எளிதாக கற்கலாம், நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.



புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.



இத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.



இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில் வல்லவர்களாகி விடலாம்.



கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை, இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது.



இணையதள முகவரி : Verbling

பி.எப் பணம் வரத் தாமதமாகிறதா.. ஆன்லைனில் காரணத்தைக் கண்டுபிடியுங்க!

பி.எப் பணம் வரத் தாமதமாகிறதா.. ஆன்லைனில் காரணத்தைக் கண்டுபிடியுங்க!

 
இந்தியாவில் நாலரை கோடி Provident Fund எனப்படும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவர் தனது வைப்பு நிதியைப் பெற விரும்பி விண்ணப்பிக்கும்போது முழு செட்டில்மென்ட்டையும் முடிக்க 5 முதல் 6 மாதங்கள் வரை ஆகிறது. உண்மையில் ஒரு மாதம்தான் அதிகபட்சம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது. இருப்பினும் 6 மாதங்கள் வரை இழுத்து விடுகிறார்கள்.

வைப்பு நிதியைப் பெற வேண்டுமானால், வருங்கால வைப்பு நிதிக் கழகத்திடமிருந்து பார்ம் 19ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைக் கொடுத்தாகி விட்டது. சரி, அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை எப்படி அறிவது... அதற்கு இப்போது எளிதான வழி வந்து விட்டது. மீண்டும் மீண்டும் பிஎப் ஆபீஸுக்குப் போய் அலைவதை விட இருந்த இடத்திலேயே அதை அறிந்து கொள்ள இப்போது ஆன்லைன் டிராக்கிங் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

அதென்ன ஆன்லைன் வசதி?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கழகத்தின் இணையதளம் (www.epfindia.com) மூலம் இந்த டிராக்கிங்கை நாம் மேற்கொள்ள முடியும்.
இந்த இணையதளத்திற்குப் போய், அதில் நமக்கு எந்த சேவை தேவையோ அதை கிளிக் செய்தால், அதுதொடர்பான அத்தனை உதவிகளும் அங்கு காத்திருக்கிறது. உதாரணத்திற்கு, உங்களது வைப்பு நிதி விடுவிப்பு நிலவரம் withdrawal claim status என்ன என்பதை அறிய வேண்டுமானால், அதுதொடர்பான இணைப்பைக் கிளிக் செய்து உள்ளே போனால் விவரங்களை அறியலாம்.
அந்த இணைப்புப் பக்கத்தில், நாம் எந்த பிராந்தியத்தின் கீழ் வருகிறோமோ அந்த அலுவலகத்தை சொடுக்க வேண்டும். அதில் நமது இபிஎப் கணக்கு எண்ணைக் கொடுத்தால், உங்களது கணக்கின் நிலவரம் தெரிய வரும்.
அதேபோல உங்களது குறைகள், புகார்களையும் கூட ஆன்லைனிலேயே நாம் பதிவு செய்யலாம். நீண்ட காலமாக விண்ணப்பித்தும் பிஎப் பணம் வரவில்லை என்றால் இந்த குறை தீர்ப்புப் பகுதிக்குப் போய் விண்ணப்பிக்கலாம்.

செல்போனிலும் அலர்ட் பண்ணுவாங்க..
அதேபோல உங்களது இபிஎப் விண்ணப்பத்தில் உங்களது செல்போன் எண்ணைக் கொடுத்திருந்தால், செல்போன் மூலமும் அலர்ட்களை அனுப்புகிறது வைப்பு நிதி கழகம். உங்களது விண்ணப்பத்தைப் பெற்றவுடன் அதுதொடர்பான ஒரு எஸ்எம்எஸ் வந்து சேரும்.
நாடு முழுவதும் உள்ள 120 பிஎப் அலுவலகங்களில் தற்போது 118 அலுவலகங்கள் ஆன்லைன் செட்டில்மென்ட் வசதியுடன் கூடியதாக உள்ளன. இதனால் சேவை விரைவாகியுள்ளது, உறுப்பினர்களுக்கும் வேலை சுலபமாகியுள்ளது.