உலக தமிழ் செம்மொழி மாநாடு பாடல் வரிகள்




பாடல் : தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி

இசை : இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான்,யுவன்ஷங்கர்ராஜா, T.M.சௌந்தரராஜன், P.சுஷீலா, ஹரிஹரன், பென்னி தயால், ரய்ஹனாஹ், பேலேஸ், அருணா சாய்ராம், கார்த்திக், சுருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிணி, சின்மயி, ஸ்வேதா மேனன், ஸ்ரீநிவாஸ், G.V. பிரகாஷ் குமார், விஜய் யேசுதாஸ், T.L.மகாராஜன், T.M.கிருஷ்ணன், சௌமியா, நித்யஸ்ரீ மகாதேவன், குணசேகர், நரேஷ் ஐயர், சுசீலா ராமன், சின்ன பொண்ணு, நாகூர் சகோதரர்கள்(M.Y.அப்துல் கனி, M.காஜா மொய்தீன், S.பாபு மொய்தீன்) 




பிறபோக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர் 
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
ஒன்பது நாழி உடுப்பது இரண்டே 
உறைவிடம் என்பது ஒன்றே 
உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம் 

தீதும் நன்றும் பிறர் தர வாராய் எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம் 
போரை புறம் தள்ளி பொருளை பொதுவாகவே 
அமைதி வழிக்காடும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் 

செம்மொழியான தமிழ் மொழியாம் 
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும் 
ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும் 
தொழ்கபுகழ் தொல்காப்பியமும் 
ஒப்பற்ற குரல் கூறும் உயர் பண்பாடு 
ஒலிக்கின்ற சிலம்பும் மேகலையும் சிந்தாமணியுடனே 
வளையாபதி குண்டலகேசியும்ம்

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

கம்ப நாட்டைவரும் கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்றும் புகழ் என்றும்
எத்தனையோ ஆயிரம் கவிதை
நெய்வோர் தரும் தடை
அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி 

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

அகம் என்றும் புறம் என்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அண்டம் இல்லாது இருக்கின்ற இனிய மொழி 
மோதி வளரும் உயிரான உலக மொழி 
மோதி வளரும் உயிரான உலக மொழி 
தம் மொழி நம் மொழி அதுவே ..

செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே 
வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே 
செம்மொழியான தமிழ் மொழியாம்