உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம்


 பொதுவாக நம்மில் பலருக்கு சில நிகழ்வுகள் வியப்பாக இருக்கும் . ஆனால் அதே நிகழ்வுகளோ அல்லது தகவல்களோ சிலருக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை .ஆனால் இன்னும் சில காட்சிகளோ அல்லது தகவல்களோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி செல்லும் . அந்த வகையில் நேற்று என்னை வெகு நேரமாக வியப்பில் ஆழ்த்தி சென்றது ஒரு கடிகாரம் . 
ப்படி வியப்பை ஏற்படுத்தும் அளவில் அந்தக் கடிகாரத்தில் என்னதான் இருக்கப்போகிறது !?  என்று நீங்கள் கேட்க நினைப்பது போலவே நானும் மனதில் பல கேள்விகளுடன் அதை பார்க்கத் தொடங்கினேன் . முதலில் எனக்கு ஒன்றும் அதில் புரியவில்லை . பின்பு சிறிது நேரத்தில் எல்லாம் மிகவும் ஆர்வத்துடன் அந்த கடிகாரத்துடன் ஒன்றி போய்விட்டேன் .
லகத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு எத்தனை ஜனனம் நிகழ்கிறது ., ஒரு நாளில் எத்தனை மரணம் நிகழ்கிறது , அதில் எத்தனை விபத்துக்களால் நிகழ்கிறது , எத்தனை இயற்கை மரணம் , ஒரு நாளில் எவளவு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது , ஒரு நாளில் எத்தனை சட்ட விரோதமான செயல்கள் நிகழ்கிறது , ஒரு நாளில் செலவிடப்படும் பணத்தின் அளவு , ஒவ்வொரு நாட்டின் பணத்தின் மதிப்பு , ஒரு நாளில் உலகத்தில் மொத்தம் மனித இனத்தால் உருவாக்கப் படும் சக்தி , ஒரு நாளில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை , ஒரு நாளில் விற்கப்படும் பொருட்களின் மதிப்பு , ஒரு நாளில் அவசர தேவைகளுக்காக அழைக்கப்படும் அழைப்புகளின் எண்ணிக்கை ., ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை ,என்று நாம் உலகத்தில் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றிய தகவல்கள் ஒரு சிறு கடிகாரதிற்குள் அடங்கி இருக்கிறது என்றால் நம்புவீர்களா !?.
ண்மைதான் நண்பர்களே ! எனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்திய அந்த கடிகாரம் உங்களையும் வியப்பில் ஆழ்த்தும் என்ற நம்பிக்கையில்தான் இந்த தகவலை நீங்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிட்டிருக்கிறேன் . இதில் இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் உலகத்தில் ஒரு நிமிடத்தில் நிகழும் மரணத்தைவிட பல நூறு மடங்குக்கும் அதிகமான ஜனனம் நிகழ்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .இந்த தகவல்களை நாம் ஒரு நாளில் நிகழும் மாற்றங்கள் என்றோடு மட்டும் இல்லாமல் , ஒரு மணிநேரத்தில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் உலகத்தில் நிகழும் மாற்றங்களையும் அறிந்துகொள்ளும் அளவில் இந்த கடிகாரம் இயங்குகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த அதிசயக் கடிகாரத்தை நான் சொல்வதை விட பார்த்து அறிந்துகொள்வதில் இன்னும் பல வியப்புகளை ஏற்ப்படுத்தலாம் .
ந்த அதிசயக் கடிகாரத்தை நீங்களும் பார்த்து வியப்பதற்கு
இந்த சுட்டியை அழுத்துங்கள்