பிளாக்கர் டெம்ப்ளேட் வடிவமைப்பான் தளங்கள்

இன்று  பல இணைய பயனர்கள் பயன்படுத்துவது பிளாக்கர் எனப்படும் கூகுளின் வசதியைதான் . ப்ளாக் எழுதும் பதிவர்களுக்கு பிளாக்கர் தளம் ஒரு சிறந்த சமூக வலைத்தளம் எனலாம் . உங்கள் பிளாக்கர் தளத்தின் பார்வைக்கு அழகாக இருக்கவேண்டும் வேண்டும் என்று பல டெம்ப்ளேடை நீங்களும் பதிவேற்றி பயன்படுத்தி பார்க்கிறீர்கள் .


wesmobtemptamil




சிலர் பிளாக்கர் தளம் வழங்கும் டெம்ப்ளேடையே பயன்படுத்துவார்கள் . ஏன் பிளாக்கர் டெம்ப்ளேகளையும் மற்ற தளங்கள் வழங்கும் டெம்ப்ளேட் களையும் நீங்கள் பயன் படுத்த வேண்டும் .நீங்களே உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு டெம்ப்ளேட் உருவாக்கினால் என்ன ...


இதற்காக நாம் ஐந்து தளங்களை பார்க்க போகிறோம் .

Firdamatic Layout Generator  


WESTEMP


பிளாக்கர் டெம்ப்ளேட் உருவாக்குவதற்கு அருமையான தளம் .

இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் , மின்னஞ்சல் ,வலைப்பதிவின் தலைப்பு ,நீங்கள் பயன்படுத்தும் பிளாக்கர் மென்பொருள் , உங்கள் பிளாக்கர் URL முகவரி ,தலைப்பு பகுதி (HEADER PARTS) URL ,Header background colour,Header font colour,Text font colour,Background colour,Link colour,Border colour,Credit box colour ஆகியவற்றை உங்களுக்கு ஏற்றவாறு அமைத்து கொண்டு டெம்ப்ளேடை உருவாக்கலாம் . 

wes1temp34
இந்த பிளாக்கர் வடிவமைப்பான் ( BLOGGER GENERATOR ) பின்னணி (BACK GROUND ),TABALS,TEXT/HEADINGS ,SCROLLER BARS,GRAPHICS  என்ற படிகளை கண்டந்து உங்கள் டெம்ப்ளேடை உருவாக்கலாம் . இந்த தளத்திற்கு சென்று START என்பதை சொடுக்கி பிளாக்கர் கருவிகளை பயன்படுத்தி டெம்ப்ளேடை வடிவமையுங்கள் ..
இது எளிமையான பிளாக்கர்  வடிவமைப்பான் கருவியாகும் . HTML மற்றும் XML மொழிகளை பயன்படுத்தி டெம்ப்ளேட் களை உருவாக்கலாம் . உங்கள் கற்பனை திறனையும் , உருவாக்கும் திறனையும் பயன் படுத்தி உங்களுக்கு பிடித்தமான ஒரு டெம்ப்ளேடை உருவாக்கலாம் . உருவாக்கி கொண்டு இருக்கும் போதே முன்னோட்டம்( PREVIEW ) பார்த்துக் கொள்ளலாம் .

PsycHo+Template+Generator
பிளாக்கர் டெம்ப்ளேட் வடிவமைப்பதற்கு சிறந்த ஆன்லைன் கருவியாகும் . 
இந்த தளம் THREE COLUMN டெம்ப்ளேடை உருவாக்கலாம் . பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே தெரியும் .

ARTISTEER-by-bdlab
Artisteer என்னும் பிளாக்கர் டெம்ப்ளேட் வடிவமைப்பான் மென்பொருள்.
டெம்ப்ளேட் வடிவமைப்பாளர்களுக்கு தேவையான ஒரு மென்பொருள் . எம்.எஸ்.ஆபிஸ் 2007 தோற்றத்தில் காட்சி அளிக்கும் . இதில் வோர்ட் பிரஸ்,joomla தளங்களுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் .