ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?

Post



இந்தியர்கள் எல்ஐசி மேல் அதீத பிரியம் கொண்டுள்ளனர். காலப்போக்கில், இன்சூரன்ஸ் என்றாலே அது எல்ஐசி தான் என்பது போல் ஆகிவிட்டது. பெரும்பாலான எல்ஐசி பாலிசிதாரர்கள், அவர்தம் பாலிசிகளின் ஸ்டேட்டஸை கஷ்டப்பட்டு கம்பெனிக்குச் சென்று பார்ப்பதைக் காட்டிலும், ஆன்லைனில் பார்ப்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.

உங்கள் பாலி;fயின் ஸ்டேட்டஸை ஆன்லைன் மூலமோ அல்லது எஸ்எம்எஸ் மூலமோ அறிந்து கொள்வதற்கான எளிய வழியைப் பார்ப்போம்.
பாலிஸி ஸ்டேட்டஸை எவ்வாறு ஆன்லைனில் பார்ப்பது?
ஆன்லைனில் ஸ்டேட்டஸைப் பார்க்க முதலில் எல்ஐசி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். புதிதாக பதிவு செய்வதாக இருந்தால் இங்கு க்ளிக் செய்யவும். இதற்கு பாலிசி நம்பர், ப்ரீமியம் தொகை, பிறந்த நாள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த உறுப்பினராக இருந்தால் நீங்கள் இங்கு லாக்-இன் செய்து உங்கள் தகவல்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் பதிவு செய்த பின் உங்கள் பாலிசி நம்பரை மட்டும் நிரப்பி ஸ்டேட்டஸை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ். மூலம் எவ்வாறு தகவல்களை பெறலாம்?
உங்கள் பாலிசியைப் பற்றிய தகவல்களை 56677 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் அறிந்து கொள்ளலாம். ஒருவர், தனக்கு கிடைக்கக்கூடிய லோன்கள், போனஸ் தொகை ஏற்றம், ரிவைவல் கொட்டேஷன், ப்ரீமியம் பொசிஷன் போன்ற பல தகவல்களை இவ்வாறு பெறலாம்.
உதாரணமாக, ஆஸ்க்எல்ஐசி (பாலிஸி நம்பர்) ப்ரீமியம்(ASKLIC (Policy Number) PREMIUM) என்பதை 56677 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
இதில்,
• ப்ரீமியம் - பாலிசியின் கீழ் வரக்கூடிய தவணை ப்ரீமியம்
• ரிவைவல் - பாலிசி காலாவதியாகும் பட்சத்தில் செலுத்த வேண்டிய ரிவைவல் தொகை
• போனஸ் - வழங்கப்பட்ட போனஸ் தொகை
• லோன் - கடனாகக் கிடைக்கக்கூடிய தொகை
• என்ஓஎம் - நாமினேஷன் தகவல்கள் என்று அர்த்தப்படுகின்றன.