அனைத்து விண்ணப்பப் படிவம்

பல்வேறு வேலைகளுக்காக தமிழக அரசு சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்கிறோம். இதற்கான பல படிவங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். இவற்றை தேடி அலைவதால் வேறு கூடுதல் செலவு. அவ்வாறு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பப் படிவங்களை இணையத் தளம் மூலம் இலவசமாக தரவிறக்கம் - டவுண்லோடிங்-  செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் .     இங்கே வெவ்வேறு சான்றிதழ்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் பெற இணைப்பு - லிங்க்-  தரப்பட்டிருகிறது. இவை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!.

தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்
  1. சாதி சான்றிதழ்
  2. வருமான சான்றிதழ்
  3. பிறப்பிடச் சான்றிதழ்
  4. இருப்பிடச் சான்றிதழ்
  5. வேளாண் சேவை இணைப்பு படிவம்
  6. விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
  7. புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
  8. பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
  9. பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
  10. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்  உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  11. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்   புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
  12. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  13. சமூக நலம்

குடியிருப்பவர் அடையாள அட்டை !



 அடையாள அட்டை என்றால் என்ன ?

குடியிருப்பவர் அடையாள அட்டை தேசிய மக்கள் தொகையைப் பதிவேட்டிலிருந்து பெறப்படுகிறது. கடலோர கிராமங்களில் தொடக்கி உருவாக்கப்பட்டு வரும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நாட்டில் உள்ள அனைத்து வழக்கமாக வசிக்கும் நபர்களுக்கான ஒரு பதிவேடு ஆகும். இதில் ஒவ்வொரு வழக்கமாக வசிக்கும் நபருக்கும் ஒரு அடையாள எண் இருக்கும். இவ்வடையாள அட்டை, அடையாள எண்ணைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் தனிநபர் விவரங்களையும் கொண்டிருக்கும். நீங்கள் இந்தியாவில் வழக்கமாக வசிப்பவர்தான் என்ற அடையாள ஆவணத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த அடையாள அட்டையில் உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்கள் தந்தை / தாயாரின் பெயர், இனம், பிறந்த தேதி, பிறந்த ஊர், கைவிரல் ரேகைப் பதிவு மற்றும் அடையாள எண் ஆகியவை இருக்கும். இவ்விவரங்களை அடையாள அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும். அதே சமயத்தில் தனிநபர் விவரங்கள் மற்றும் விரல் ரேகைப் பதிவு விவரங்கள், அடையாள அட்டையில் உள்ள நுண் மின்னணு செல்லில் [ Microprocessor Chip ] பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்தியாவில் 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின்  70 மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வழக்கமாக வசிப்பவர் என்ற அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பதிவேட்டில் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கும் அடையாள எண் கொடுக்கப்படும். முதன் முதலில் இந்த அடையாள அட்டையைப் பெறுபவர்களாக நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்கிறீர்கள்.

 சரி என்னதான் பயன்கள் ?

1. உங்களுடைய அடையாளத்தை நிலைநாட்ட

2. உங்களுடைய குடியிருப்புத் தகுதியை நிலைநாட்ட

3. வயது மற்றும் பிறந்த தேதியை உறுதிசெய்ய [ இப்பதிவில் இணைக்கப்பட்ட அட்டையில் உள்ளவாறு ]

4. வங்கி கணக்கு, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம்/வாகனப்பதிவு, தொலைப்பேசி/கைபேசி. LPG கேஸ் இணைப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போதும், மேலும் திருமணப் பதிவு, நிலம்/சொத்து போன்றவை பதிவு செய்யும்போதும், இந்த அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிலைநாட்டுகிறது.

 பயன்படுத்தும் வழிமுறைகள் :

இந்த அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிருபிக்கும் முக்கியமான சான்றாவணம் ஆகும். உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கேட்கும் அலுவலங்கள் / நிறுவனங்களுக்கு இந்த அடையாள அட்டையைக் காட்டலாம். மத்திய / மாநில அரசு அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / வட்ட அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வங்கிகள், பாஸ்போர்ட் அலுவலகம், சேவை நிறுவனங்களான தொலைப்பேசி/கைபேசி நிறுவனங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்கள் போன்றவற்றில் இந்த அடையாள அட்டை பயன்படும். அடையாள அட்டையில் அச்சடிக்கப்பட்டுள்ள விவரங்களை பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம் போன்ற விவரங்களைத் தவிர மின்னனு செல்லில் பதிவு செய்யப்பட்ட மற்ற விவரங்களை எங்கெல்லாம் [ Card Reader ] என்று சொல்லக்கூடிய படித்தறியும் கருவி இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்தக்கருவி மூலம் மின்னனு செல்லில் உள்ள விவரங்களை படித்தறிய முடியும்.

மின்னனு செல்லில் தற்போதைய / நிரந்தர முகவரி, திருமணநிலை, துணைவரின் பெயர் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இது உங்களுடைய அடையாளத்தை நிருபிக்கும் ஒரு சான்றாவணம் என்பதால் அரசு அல்லது காவல்துறை அல்லது பாதுகாப்புப்படை அதிகாரிகள் அடையாளம் பற்றிக் கேட்டால் நீங்கள் இதை அவர்களிடம் காண்பிக்கலாம். உங்கள் அடையாளம் பற்றிய கேள்வி விசாரணை முடிந்தபின் அடையாள அட்டையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள மறந்து விடாதிர்கள். சில சூழ்நிலைகளில் அடையாள அட்டையை கொடுத்துவிட்டு செல்லவும் என்று கேட்டாலொழிய, மற்ற நேரங்களில் அட்டையை விட்டு விட்டு வராதிர்கள். இம்மாதிரி நேரங்களில் அடையாள அட்டையை ஒப்படைத்தற்கான அத்தாட்சியை சம்பந்தப்பட்ட அலுவலகம் /அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளவும்.

பாதுகாப்பது மற்றும் தொலைந்து போனால் புகார் செய்வது தொடர்பாக..
உங்களுடைய அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிருபிக்கும் விலைமதிப்பற்ற ஓர் ஆவணமாகும். ஆகையால் இதைப்பாதுகாப்பதும் பத்திரமாக வைத்திருப்பதும் உங்களுடைய கடமையாகும். வேறு எவரும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அடையாள மோசடி செய்தல் போன்றவற்றை தவிர்க்க இந்த அடையாள அட்டையை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அடையாள அட்டை சேதமடையாமல் இருக்க இதை நீர்/ நெருப்பு / மின்னனு சாதனங்கள் படாமல் பார்த்துக்கொள்ளவும். இல்லையெனில் மின்னனு செல்லில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் பாழாகிவிடும். செல்போனுடன் அடையாள அட்டையை ஒன்றாக வைக்காதீர்கள். இதை வளைக்கவோ மடிக்கவோ கூடாது. அப்படி செய்தால் அட்டையில் பதிக்கப்பட்டுள்ள மின்னனு செல் வெளியே வந்துவிடும். பின்பு அடையாள அட்டை பயனற்று விடும்.

 அடையாள அட்டையை பாதுகாப்பாக வைப்பதற்கும் அவசர சூழ்நிலையில் செய்ய வேண்டியதற்கும் சில வழிமுறைகள்...

1. உங்களுடைய அடையாள எண்ணை குறித்து வைத்துக்கொள்ளவும். அட்டை தொலைந்து விட்டாலோ களவு போய் விட்டாலோ மாற்று அட்டை பெற இது பயன்படும்.

2. உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினருடைய அடையாள அட்டை தொலைந்துவிட்டால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். நீங்கள் மாற்று அட்டை பெற படிவம் R-1 இல்  விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்ப படிவத்துடன் காவல் நிலையத்தில் அட்டை தொலைந்ததற்கான கொடுக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை யையும் [ FIR ]  இணைக்க வேண்டும்.

3. உங்கள் அடையாள அட்டையில் அச்சிடப்பட்டுள்ள தனிநபர் விவரங்களில் திருத்தமோ, மாற்றமோ செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் கிராம அதிகாரியையோ, தாலுகா அதிகாரியையொ கேட்டு உதவியைப் பெறலாம். அப்படி முடியாத பட்சத்தில் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரை மின் அஞ்சல் [ E-mail ] மூலமோ அல்லது கட்டனமில்லாத தொலைப்பேசி மூலமோ தொடர்பு கொண்டு உதவியைப்பெறலாம்.

4. அடையாள அட்டைதாரர் இறந்துவிட்டால் அவருடைய நெருங்கிய உறவினர்கள் இறந்த நபரின் அட்டையை குடியுரிமைத் தலைமைப் பதிவாளரிடமோ அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரியிடமோ நேரிடையாகவோ தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இயக்குனர்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம்,
E-பிரிவு, மூன்றாவது மாடி,
இராஜாஜிபவன், பெசன்ட்நகர்,
சென்னை-90 , தமிழ்நாடு
தொலைப்பேசி எண் : 044-24912993, 24911992

அல்லது

வட்டாட்சியர் அலுவலகம்
மாவட்டம்
தமிழ்நாடு

 புதிதாக பதிவு செய்ய விண்ணப்பிக்கவும், அட்டை வழங்குவதற்கான வழி முறை

முதன் முதலில் தகவல் சேகரித்த போது விடுபட்டுவிட்ட வழக்கமாக வசிப்பவர்களும், 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், தகவல் சேகரித்தபின் புதிதாகக் குடியேறியுள்ளவர்களும் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். இத்தகைய நபர்கள் தாலுகா பதிவாளரிடம் தங்களை சேர்க்குமாறு விண்ணப்பிக்கலாம்.

 தொடர்பு கொள்ள :

உங்களுக்கு அடையாள அட்டை பற்றிய தகவல்கள் அறிய விரும்பினாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள விரும்பினாலும் மாற்று அட்டை பெற விரும்பினாலும், அட்டை திருட்டு போய்விட்டாலும் அல்லது தொலைந்து போனாலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய, தேசிய அடையாள அட்டை சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்.

E-mail : nprcoastal.rgi@nic.in / npr.tn@nic.in
கட்டணமில்லாத் தொலைப்பேசி எண் : 1800110111
கீழ்க்கண்ட வலைத்தளத்திலும் விவரங்களை அறியலாம் :
www.censusindia.gov.in

Directorate of Census Operations ,
Chenai – 600090
Tamil Nadu
Tel : 044-24911992

தலைவர் யார்?



1.   நானே பெரியவன்.... நானே சிறந்தவன்.... என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரணும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது

2.   விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது

3.   எதிர்மறையாகச் சிந்திப்பது

4.   பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.

5.   தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது

6.   அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது

7.   தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.

8.   சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது

9.   மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது

10. பதவி...! பதவி...!! பதவி...!!! என்ற நினைவில் எப்போதும் வாழ்வது

போன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு

நல்லப் பண்புகளாகிய....

1.   எளிமையாக வாழ்தல்

2.   ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல நட்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, அன்பு செலுத்துதல், கடமையை நிறைவேற்றுதல்

3.   வேகமாகச் செயல்படுதல்

4.   எப்பொழுதும் நேர்மையாக செயல்படுதல்

5.   தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்

6.   மூத்தோர்களின் நல்ல அனுபவங்களைப் பெறுதல்

7.   ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்

8.   தீர்க்கமான முடிவு செய்தல்

9.   வீண் விரயத்தைக் குறைத்தல்

10. தரத்தை மேம்படுத்துதல்

11. திட்டமிடுதல்

12. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்

13. எளியோருக்கு உதவுதல்

போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் நிச்சயம் மேன்மை அடைவீர்கள். இதற்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு எடுத்துக்காட்டை தங்களுக்கு கூற விரும்பிகிறேன்....

நூறு பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளார் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும் ? ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார். “ஆம்“ என்று அனைவரும் கையைத் தூக்கினர்.

மீண்டும் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார் “ஆம் “ என்று அனைவரும் மீண்டும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார்... கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கின்றோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களின் மூலம் சிறந்தவன், ஒழுக்கமானவன், தலைமை வகிக்க தகுதியானவன் போன்ற சிறப்புகளைப் பெறுகின்றோம்...

நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி  அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்லப் பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள் !

புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ?


புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்.

மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரை இறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :
1. இருப்பிட சான்று

2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை

3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]

4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.

6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.

7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.

2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [ DSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு : 
புதிய குடும்ப அட்டை பெற வேண்டி இடைத்தரகர்களிடம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கையூட்டு கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.

போலீஸ் முத்திரை : தெரிந்ததும் - தெரியாதாதும் !


சமூகத்தில் குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது நமது காவல்நிலையத்திற்கே !

காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

காவல்துறையினர் அணிந்துருக்கின்ற ஆடை ஒரே தோற்றத்துடன் இருப்பாதால் சில நேரங்களில் நம் மனதில் ஒருவித குழப்பம் ஏற்படுவதுண்டு.

சரி எவ்வாறு அவர்களை இனங்காணுவது ?

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.
இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  

Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]

Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia

புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி ?


புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :1. இருப்பிட சான்று
2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO ) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் இலவசமாக கற்றுக்கொள்ள!!

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விசயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஆன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.ஆன்லைன் மூலம் பல தரப்பட்ட விசயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விசயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.


ஒரு சில விசயங்களை நீங்கள் ஆன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களாwww.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ளwww.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.

* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால்www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.


* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள்www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால்www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

இணையதளங்கள்

ஏர் இந்தியாவிை் இணையத்தளம்.
http://www.airindia.com
சென்னை துறைமுகம்அமைப்பு, கட்டணங்கள், சரக்குக் கப்பல் விவரங்கள், பயணிகள் கப்பல், ஒப்பந்தப் புள்ளி...
http://www.chennaiporttrust.com

இந்தியன் ஏர்லைன்ஸ்
http://www.indian-airlines.nic.in
இந்திய ரயில்வே
http://www.indianrailways.gov.in
தென்னக ரயில்வேமுன்பதிவு, பயணச்சீட்டு விவரம், ஒப்பந்தங்கள், பயணிகள் விபரம்
http://www.southernrailway.org

அரசுதுறை இணையதளங்கள்

பதிவுபெற்றவர்கலுக்கான தமிழக அரச துறை
http://igregn.tn.nic.in
கோவை வடக்கு போக்கு வரத்து வட்டார அலுவளகம்கோவை வடக்கு போக்கு வரத்து வட்டார அலுவளகம்
http://rto.coimbatore.com
தமிழ்நாடு மாநில நிதிக்கமிஷன்
http://tnsfc.tn.nic.in
தமிழக அரசு விவசாயத்துறை
http://www.agri.tn.gov.in
தமிழக அரசு விவசாயத்துறை
http://www.agri.tn.gov.in/default.htm
வோலான்மைத்துறை மந்தியபிரதேசம்
http://www.agrimp.nic.in
கலால் மற்றும் சுங்கவரித்துறை - பூனே
http://www.cencuspune.com
தில்லி அரசு
http://www.delhigovt.nic.in
தமிழக காவல் துறையில் மதுவிலக்கு அமல் பிரிவுகள்ளச் சாராயம் தயாரிப்போர், நுகர்வோர் மீது நடவடிக்கை எடுப்பது, தடை செய்வது.
http://www.prohibitionenforcement.com/
மாநில வளமையம்
http://www.src-chennai.com
தொழிற்ச்சாலை மற்றும் வனத்துறை இயக்கனரகம்தொழிற்ச்சாலை மற்றும் வனத்துறை இயக்குனரகம்
http://www.tamilnaduindcom.org
மாநில போக்குவரத்துறை
http://www.tn.gov.in/sta
தடவியியல் மற்றும் அறிவியியல் துறை
http://www.tn.gov.in/tamilforensic
பார்வையற்றோர்க்கான மாநில மறுவாழ்வு மையம்பார்வையற்றோர்க்கான மாநில மறுவாழ்வு மையம்
http://www.tndisrehab.org
தமிழ்நாடு சாலைப்பிறிவு
http://www.tnrsp.com
தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்ரேஷன் லிமிடெட்தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்ரேஷன் லிமிடெட்
http://tnmsc.tn.nic.in
தமிழ்நாடு பாரஸ்ட் பிளான்டேஷன் கார்ப்ரேஷன் லிமிடெட்தமிழ்நாடு பாரஸ்ட் பிளான்டேஷன் கார்ப்ரேஷன் லிமிடெட்
http://webpage.vsnl.net.in/tafcorn
http://www.aavinmilk.com
சென்னை மாநகராட்்சிசென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள
http://www.chennaicorporation.com
மாநகர குடிநீர்சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் குறித்த தகவல்கள்.
http://www.chennaimetrowater.com
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நகர்புற மற்றும் புறநகர் வளர்ச்சி திட்டங்கள்.
http://www.cmdachennai.com
தில்லி மாநகர ரயில் கார்ப்ரோஷன் லிமிடெட்
http://www.delhimetrorail.com
தமிழ்நாடு மின்னணுக் கழகத்தின் இணையதளம்மின்னணு வளர்ச்சியில் மாநிலக் கழகத்தின் பங்கு, தகவல் தொடர்பு மற்றும் கணிப்பொறித்துறையில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த தகவல்கள்
http://www.elcot.com
http://www.focustamilnadu.comதமிழ்நாடு பெண்கள் நல வளர்ச்சிக் கழகம்.
http://www.indweb.com/woman
தமிழ்நாடு காதிகிராப்ட் போர்டு
http://www.khadikraft.com
வெளிநாட்டு வேளைவாய்ப்பு மையம் பஞ்சாப்
http://www.overseaspunjab.com
மாநில தெழிற்துறை மேம்பாட்டுக் கழகம் - தமிழ்நாடு
http://www.sagoserve.com
சிப்காட்
http://www.sipcot.com
தாட்கோ
http://www.tahdco.com
சிட்கோ
http://www.tamilnaduexports.com
http://www.tamilnaduinvest.com
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இனையதளம்.
http://www.tamilnadu-kudineer.com
பெண்கள் மெம்பாட்டுக்கழகம் - தமிழ்நாடு
http://www.tamilnaduwomen.org
தமிழ் நெட் 99தமிழின் அங்கீகரிக்கப்பட்ட மென்பொருள், தட்டச்சுப் பலகை, மாநாட்டு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்.
http://www.tamilnet99.org
தமிழ் இனைய பல்கலைக்கழகம்
http://www.tamilvu.org
டேம்ப்கால் - தமிழக அரசு
http://www.tampcol.com
டிட்கோதமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் இணையத்தளம்.
http://www.tidco.com
தெழிர்துறை முதலீட்டுக்கழகம் - தமிழ்நாடுhttp://www.tiic.org 
திருவாருர் நகராட்சி
http://www.tiruvarurmunicipality.com
http://www.tn.gov.in/tnma
தமிழக நகாக வளர்ச்சித்துறை
http://www.tn.nic.in/tnudp
தமிழ் நாடு மின்சாரதுறை
http://www.tneb.org
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்பரேஷன்
http://www.tninfrafinance.com
http://www.tnpl.net
தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையத்தின் இணையத்தளம்
.http://www.tnpsc.org
தமிழக அரசு வற்தக வரித்துறை
http://www.tnsalestax.com
http://www.twadboard.com 
http://www.upavp.com
தமிழ்நாடு தொழில் உள் கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம்.http://www.welcometacid.com