திரைப்பட பாடல் ஒன்றை தேடும் சமயம் இந்த இணையதள முகவரி கிடைத்தது. திரைப்பாடல் என பெயரிட்டுள்ள இந்த இணையதளம் காண
இங்கு கிளிக்செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வீடு.இசை,திரைப்படங்கள்.பாடல்கள்.நடிகர்கள்.வருடம்.தொகுப்புகள் என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளளார்கள்.இதில் இசையை கிளிக் செய்தால் உங்களுக்கு இசையமைப்பாளர்களின் பெயர்கள் வரும்.அவர்கள் இசையமைத்த படங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை தெரியவரும் தேவையான இசைஅமைப்பாளர் பெயரை கிளிக செய்து பாடலை தேர்வு செய்யலாம்.திரைப்படங்களின் பெயரை கிளிக் செய்தால் உங்களுக்கு அகர வரிசையில் படங்கள் தெரிய வரும்.தேவையான படங்களை தேர்வு செய்யலாம்.நான் பார்மகளே பார் படத்தினை தேர்வு செய்துள்ளேன்.
பாடகர்கள் வரிசையில் அவர்கள் பாடிய மொத்த பாடல்களையும் தொகுத்துள்ளார்கள். தொகுப்புகளில் இசையமைப்பாளர்களின் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்கள். ராகங்கள் நமக்கு தெரியும். இதில் இளையராஜாவின் பாடல்களை ராகங்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள். நான் லதாங்கி ராகத்தில் வந்துள்ள பாடலை கீழே கொடுத்துள்ளேன்.
பாடல்களை கேட்பதற்கு இதிலேயே ப்ளேயர்கள் கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment