அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) சமூக பாதுகாப்புக்காக தமிழக் அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் (Welfare Board) ஆகும்.
இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது.
- விவசாயத் தொழிலாளர் நலவாரியம்
- மீனவர் நல வாரியம்
- கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
- சீர்மரபினர் நல வாரியம்
- பழங்குடியினர் நல வாரியம்
- ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நல வாரியம்
- பனைமரத் தொழிலாளர் நல வாரியம்
- காலணித் தொழிலாளர் நல வாரியம்
- ஊனமுற்றோர் நல வாரியம்
- அரவாணிகள் நல வாரியம்
- முடி திருத்துவோர் நல வாரியம்
- தையல் தொழிலாளர் நல வாரியம்
- ஓவியர் நல வாரியம்
- கைத்தறி மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் நல வாரியம்
- தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம்
- நரிக்குறவர் நல வாரியம்
- உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
- கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம்
- நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்
- அருந்ததியர் நல வாரியம்
- கட்டட தொழிலாளர்கள் நல வாரியம்
- புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம்
- அச்சக தொழிலாளர் நல வாரியம்
- கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலவாரியம்
- தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியம்
- தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம்
- தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
- திரைத் தொழிலாளர் நலவாரியம். ஆகியன.