தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு ( விஜிலென்ஸ் ) அதிகாரிகளை எளிதாக தொடர்பு கொள்ள உதவும் இணையதளம்.
அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையை செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரை எங்கு எப்படி புகார் அளிக்க வேண்டும் என்று தமிழ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளம் தெளிவாக தெரிவிக்கிறது ஒவ்வொரு மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் போன் நம்பர் முதல் அலைபேசி எண் வரை அத்தனையும் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ” விஜிலென்ஸ் “ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துவருவதை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்போம், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை பற்றிய தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுங்கள் என்று சொல்வதை கேட்டிருப்போம் எப்படி இவர்களை தொடர்புகொள்வது இவர்களின் போன் நம்பர் முதல் அனைத்துவிபரங்களையும் சொல்ல அரசு இணையதளம் ஒன்று உள்ளது இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.dvac.tn.gov.in/
தமிழகத்தில் அரசுத்துறையில் வேலை பார்க்கும் நபர்கள் யாராக இருந்தாலும் சரி தங்கள் கடமையை செய்ய லஞ்சம் கேட்டால் உடனடியாக நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்பு கொண்டு கூறலாம். இத்தளத்திற்கு சென்று இதன் நடவடிக்கைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். இடது பக்கம் இருக்கும் Directory என்பதை சொடுக்கி வருவதில் நாம் எந்த Range ல் இருக்கும் அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டுமோ அவர்களை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக ஒவ்வொரு Range-லும் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும் அலுவலக முகவரி , போன் நம்பர், அலைபேசி எண் என அனைத்தையும் கொடுக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கு லஞ்சம் கேட்டாலும் இவர்களுக்கு தெரிவிக்கலாம். உதாரணமாக ஒரு காவல்நிலையத்தில் லஞ்சம் அதிகமாக விளையாடுகிறது என்றால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். லஞ்சத்தை ஒழிக்க தமிழகஅரசுடன் நாமும் கைகோர்த்து செல்வோம்.கண்டிப்பாக இந்தப்பதிவு விஜிலென்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.