இந்தியாவின் முக்கிய தலைவர்களையும் , கலாச்சாரத்தையும் எடுத்துச்சொல்லும் பயனுள்ள தளம்.
இந்தியா சுதந்திரம் பெற தம் இன்னுயிரை துறந்த தியாகிகளுக்கு நன்றி என்று ஒருவார்த்தையில் சொல்ல முடியாது. எத்தனை காலம் தன் உயிரையும் தம் குடும்பத்தினரையும் பொருட்படுத்தாது நம் தேசத்திற்காக எல்லாவற்றையும் துறந்த தியாகிகளை நினைவு கூறும் வகையிலும் இந்தியாவில் கலாச்சாரத்தை எடுத்து அனைத்து மக்களுக்கும் எடுத்துச்சொல்லும் விதத்தில் ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சாதி , மதம் , இனம் என்ற அனைத்துயுமே கடந்து என் தேசம் விடுதலை அடையவேண்டும் அதற்காக நான் எதையும் இழக்கத்தயார், இனி வரும் நம் குழந்தைகள் விடுதலை காற்றை சுவாசிக்கட்டும் என்ற நோக்கில் விடுதலை வாங்கி கொடுத்த தியாகிகளை என்று நினைவில் இருக்கும் வண்ணம் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://www.culturalindia.net
எங்கள் கலாச்சார இந்தியா என்னவெல்லாம் இருக்கிறது மறக்க முடியாத தலைவர்கள் முதல் பல அரிய கலைகள் வரை அத்தனையும் தெளிவாக விபரங்களுடன் தெரிவிக்கிறது. திலகர் முதல் சரோஜினி நாயுடு வரை அத்தனை போராளிகளின் விபரத்தையும் படத்துடன் கொடுக்கிறது. இந்திய கலாச்சாரம் என்ற தலைப்பில் தலைவர்கள் , சீர்திருத்தவாதிகள் , இந்திய ஆடை , இந்திய உணவு , இந்திய கட்டிடக்கலை , இந்திய நகைகள் , இந்திய கைத்தொழில் , விலையுயர்ந்த கற்கள், இந்திய சினிமா , இந்திய கோட்டைகள் , இந்திய யாத்திரைக்கு , இந்திய மதங்கள் , இந்திய நினைவுச்சின்னங்கள் , தேசிய குறியீடுகள் , இந்தியாவில் உள்ள கோவில்கள் , இந்திய டூர்ஸ், இந்திய கலை , இந்திய ஓவியர்கள் , இந்திய ஓவியங்கள் , ரங்கோலி , இந்திய நடனங்கள், இந்திய பாரம்பரிய நடனங்கள் , இந்திய பாரம்பரிய நடன கலைஞர்கள் , இந்திய கிராமிய நடனங்கள் , இந்திய வரலாறு , பண்டைய இந்தியா , நவீன இந்திய வரலாறு , இந்திய ஃபோக்டேல்ஸ், கதைகள் Hitopadesha , Jatakac கதைகள் ,கதைகள் பஞ்சதந்திர கதைகள் , இந்திய இசை , இந்திய கிளாசிக்கல் பாடகர்கள் , இந்திய பாடகர்கள் , இந்திய கனடிய , தீம் கனடிய திருமண வழக்கங்கள் , பெண் தயார்படுத்தல்கள் , பிராந்திய கனடிய , ஆண் தயார்படுத்தல்கள் , திருமண சடங்குகள் , திருமண ஏற்பாடுகள் இன்னும் பலவிதமான தகவல்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் இந்தத்தளத்தை அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது. நம் வின்மணியின் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.