தங்கத்தின் தரம் 916 என அழைக்கப்படும் காரணம் தெரியுமா ?


ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே என தினமும் நாம் தங்க நகை விளம்பரங்களை பார்க்கிறோம் ஆனால் அதில் வரும் 916 என்ற வார்தைக்கு  உங்களுக்கு அர்த்தம் தெரியுமா ?

சுத்தமான  தங்கத்தின் மதிப்பு 24 காரட் ஆகும் .இதனை கொண்டு தங்க நகைகள் செய்ய இயலாது எனவே மிக குறைந்த அளவு 2 காரட் செம்பு போன்ற உலோகங்கள் சேர்க்கிறார்கள்  எனவே தங்க நகைகள் செய்ய உகந்தது  24 -2 = 22 காரட் ஆகும். 

22 காரட்டை 24 காரட்டால் வகுத்து சதவீதம் கண்டால் கிடைப்பது 916 ஆகும்
22/24 சதவீதமாக மாற்றா வேண்டும் எனில் 
22/24 * 100 =91.6
தசமப்புள்ளியை நீக்கினால் கிடைப்பது 916 ஆகும்