இணையதளம் மூலம் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி!
இனி இணையதளம் மூலம் மாணவர்கள் அரசு கல்வி உதவி பெறலாம்!
www.edistrict.tn.gov.in எனும் இந்த தளத்திலேயே மாணவர்கள் இனி கல்வி உதவித் தொகைக்கான அனைத்து விவரங்களையும் பெறலாம்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், இணையதளத்தின் மூலம் கல்லூரி முதல்வர்களால் பதிவு செய்யப்படும்.
இதன்பின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் செய்யப்படும். பின்னர், இணையதளத்தின் மூலம் பிற விவரங்கள் அறிந்து அதற்கேற்ப கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இதன் காரணமாக தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும். மாணவர்கள் தங்களது விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது; யாரிடம் உள்ளது; எப்போது கிடைக்கும்; எவ்வளவு உதவித் தொகை கிடைக்கும் என்ற விவரங்களை தாங்களாகவே இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகையும் இந்த முறையில் வழங்கப்படும் என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்கள், உடனடியாக தங்கள் கல்லூரி முதல்வர்களை அணுகி விவரங்கள் பெற்றுக் கொள்ளவும்.