நினைத்த எண்ணினை கண்டுபிடிக்கும் சுவையான விளையாட்டு

நண்பர்களே பள்ளி நாட்களில்  நாம் விளையாடிய மிகவும் சுவையான கணித விளையாட்டு நினைத்த எண்ணினை கண்டுபிடிக்கும் விளையாட்டு  இந்த விளையாட்டை விளையாட பல வகை முறைகள் இருப்பினும்  99  தவிர அனைத்து எண்களுக்கும் பொருந்தும் எளிய முறையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

 
விளையாடும் முறை

உங்களின் நண்பர்களையோ உறவினர்களையோ ஏதாவது ( 99 தவிர ) ஒரு எண்ணினை மனதில் நினைத்துக்கொள்ளச்சொல்லுங்கள் பின்பு கீழே கொடுக்கப்பட்ட விதிகளை மனதிலேயே பின்பற்ற சொல்லுங்கள் கடைசியில் கிடைக்கும் விடையை மட்டும் சொல்லச்சொல்லுங்கள் அதிலிருக்கும் பூச்சியங்களை  நீக்கி விட்டால் கிடைக்கும் எண்தான் மனதில்  நினைத்த எண் ஆகும்  

விதிமுறைகள்

1 . மனதில் நினைத்த எண்ணினை இருமடங்கு ஆக்குக
2 . 4 கூட்டுக
3 . 5 ஆல் பெருக்குக
4 . 12 கூட்டுக
5 . 10 ஆல் பெருக்குக
6 . 320 கழிக்க
கிடைக்கும் விடையை சொல்லச்சொல்லுங்கள் அதிலிருக்கும் பூச்சியங்களை நீக்கி விட்டால் மனதில்  நினைத்த எண் கிடைக்கும்

எடுத்துக்காட்டு

மனதில் நினைத்த எண் 63 எனில் அதை இரு மடங்காக்கினால் கிடைப்பது 126 அதனுடன்  4 கூட்டினால் கிடைப்பது 130 அதை  5 ஆல் பெருக்க கிடைப்பது  650  அதன்னுடன்  12 கூட்ட கிடைப்பது 662 அதை 10 ஆல் பெருக்கினால் கிடைப்பது 6620 அதிலிருந்து 320 கழித்தால் கிடைப்பது  6300  ஆகும் இதில் உள்ள பூச்சியங்களை  நீக்க கிடைப்பது 63 இதுதான் மனதில் நினைத்த எண்.