கல்வி உதவித் தொகை

படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன.
பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.
www.scholarshipsinindia.com
www.education.nic.in
www.scholarship-positions.com
www.studyabroadfunding.org
www.scholarships.com
www.scholarshipnet.info
www.eastchance.com
www.financialaidtips.org
இந்த இணையதளங்களில், கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

குறைந்தசெலவில் மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு உதவிடும் இணையதளம்

இந்த பூவலகில் வாழும் தற்போதைய நாகரிக மனிதர்கள் அனைவரும் தம்முடைய வாழ்நாளில் ஒருநாளாவது தன்னுடைய உடல்நிலை சரியில்லை என காண்பிபு்பதற்காக மருத்துவரிடம் செல்லாமல் இருக்கவேமுடியாது என்ற நிலை தற்போது உள்ளது ஆனால் மருத்துவர்களும் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு குறைந்தசெலவில் மருத்துவம் பார்ப்பதே இல்லை அதற்கு பதிலாக முடிந்தவரை நோயாளியின் பையிலும் வங்கியிலும் இருப்பாக வைத்துள்ள அனைத்து பணத்தையும் அவர்களை பயமுறுத்தி அபகரிப்பதற்கு என்னென்ன வழியுண்டோ அத்தனையும் பின்பற்றிடுவார்கள் அவ்வாறான வழிகளுள் ஒன்றுதான் மருத்துவர்களிடம் வரும் நேயாளிகளுக்கு பரிந்துரைசெய்யும் மருந்துகளின் பெயர்களாகும்
 குறிப்பிட்ட நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான அடிப்படை Generics பொருட்கள் மிககுறைந்த விலையில் கிடைத்தாலும் ஒருசில நிறுவனங்களானது அம்மருந்திற்கு எனத்தனியானதொருbrand பெயரினை இட்டு விளம்பரபடுத்துவதை தொடர்ந்து தமக்கும் கமிஷன் கிடைக்கும் என்ற பேராசையுடன் மருத்துவர்கள் ஏராளமான இலாபத்துடன் விற்கபடுகின்ற குறிப்பிட்டbrand பெயருடைய மருந்துகளை மட்டுமே நோயாளிகள் வாங்கிடவேண்டும் என  அவைகளை கட்டாயபடுத்தி அந்நோயாளிகள் வாங்கும்படி பரிந்துரைசெய்திடுவார்கள்
அவ்வாறான நிலையில் பாதிக்கபடுவோர் www.medguideindia.comஎன்ற தளத்திற்கு சென்றுdrugs என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் brand என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அதன்பின்னர் உதாரணமாகMetocard XL(50mg) என்ற பெயருள்ள மருந்தினை கொள்முதல் செய்வேண்டியநிலையில் அதன் பெயரை உள்ளீடு செய்து search என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு Generics என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அது தொடர்பான அட்டவனைஒன்று திரையில் பட்டியலிடப்படும் அந்த பட்டியல் முழுவதையும் நம்மால் படித்து பார்த்து விவரம் அறிந்துகொள்ளமுடியாது அதனால் திரையில் உள்ள matched Brands with above constituents என்ற வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் என்ன ஆச்சரியம் ரூ.62.00 என்ற விலையுள்ள இந்த மருந்திற்கு இணையான இதே அடிப்படை Generics மருந்து பொருட்கள் சேர்ந்தCipa(Mepol) என்ற பெயரில் ரூ7.00 என்ற மிககுறைந்த விலைக்கே கிடைக்கின்றது என்ற தகவலை திரையில் காண்பிக்கின்றது இவ்வாறே நீங்களும் உங்களுக்கு தேவையான மருந்து பொருட்களை மிககுறைந்த விலையில் சந்தையில் பெற்றிடுக என பரிந்துரைக்கபடுகின்றது

அரசின் முக்கிய தளங்கள்

Tamilnadu based websites

 Government:
www.tn.gov.in
District sites:
www.tn.nic.in/tnhome/tndis.html
Employment:
www.tnvelaivaaippu.gov.in
Electric Board:
www.tneb.in
Arasu Cable:
www.arasucable.com
Police:
www.tnpolice.gov.in
TNPSC:
www.tnpsc.gov.in
TRB:
www.trb.tn.nic.in
Madras High Court:
www.hcmadras.tn.nic.in
Online Text Books:
www.textbooksonline.tn.gov.in
Teachers University:
www.tnteu.in

Book Train Tickets

புதிதாக குடும்ப அட்டை பெற வழி முறைகள்

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை
ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்.

மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரையிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :

1. இருப்பிட சான்று

2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை

3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]

4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.

6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.

7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.

2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [ DSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு :
புதிய குடும்ப அட்டை பெற வேண்டி இடைத் தரகர்களிடம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் லஞ்சம் கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்

வாக்காளர் பட்டியலில் நம்மை பற்றிய விவரங்கள் சரிபார்க்க

நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.
நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில் சோதித்துக்கொள்ளலாம்.

இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக் பண்ணுங்க.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்.அடுத்து சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும்.நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.


அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.


தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

ஒட்டுப்போடுங்கள்.
ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

தமிழ்நாடு அரசின் சான்றிதழ்களுக்கான விண்ணப்ப படிவங்கள்


தேவையான படிவங்களின் மேலே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளலாம்.

  1. சாதி சான்றிதழ்
  2. வருமான சான்றிதழ்
  3. பிறப்பிடச் சான்றிதழ்
  4. இருப்பிடச் சான்றிதழ்
  5. வேளாண் சேவை இணைப்பு படிவம்
  6. விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
  7. புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
  8. பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
  9. பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
  10. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்  உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  11. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்   புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
  12. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  13. தமிழ் நாடு ஆதி திராவிட வீடு கட்டும் மற்றும் மேம்பாட்டு நிறுவன கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  14. பிறப்பு சான்றிதழ்
  15. இறப்பு சான்றிதழ்
  16. குழந்தை பெயர் பதிவு செய்தல்
  17. சத்யஅம்மையர் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் - விண்ணப்படிவம்
  18. ஆதரவற்றக் குழந்தைக்கான திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்பபடிவம்

ரேஷன் கடையின் சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.


ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மின் கட்டணம் கணக்கிடும் முறை

வீட்டு இணைப்புகளுக்கானது:-
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt9a9J31z7WWUH7srQWxeHk4IYPu7pUbkLrVA_DIrALIdTDvlO6QIiJshcP6HaODvurRxQAhhweuvWGSmgAQNbsgWpH2PV80F0noIq4dXdPM_42EsdUtVmFOiCc9HxkwpjF03Ds3Jas1Jo/s1600/Image+11.png

முதல் நிலை:--
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
---------------------------------------

இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
-------------------------------

மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.

நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)
--------------------------

நான்காம் நிலை:---
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
--
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்தவேண்டும்)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTVboWYHICEW0seO9vpJoIHs9a4tq2lKFzyp_ZE6oiKQgFTJjb7-TkHvnY-IHJzgLOUIr0zjSlOA12IQUVOZKmetIwPlJNv6L7OXlmr5EjamwjWHaTwKIGdwoLo2-Mv-Ua6jSsv315nwOg/s1600/tnebtarrif-1.jpg

தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை

மாநில அரசின் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் பெற தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டிசி - என்.சி.வி.டி, பாலிடெக்னிக், நர்சிங் பட்டய படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளநிலை பட்டப்படிப்பு, எம்.பில், பி.எச்டி போன்ற படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமாணம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்ற உதவித்தொகை பெற முடியாது.

பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கல்வி நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். கல்லூரி படிப்பு பயிலும் மாணவர்கள் www.momascholarship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த விண்ணப்பத்தை நகல் எடுத்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கான வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் (ஐ.எப்.சி கோடுடன்)இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் கல்வி நிறுவனத்திந்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் பள்ளி மாணவர்கள் ஜூலை 31ம் தேதி வரையிலும், கல்லூரி மாணவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விரிவான விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கலாம். .

அரசின் இலவச கல்வி உதவி தொகை




பள்ளிபடிப்பு
1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும்,
அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு( சில நூறு ரூபாய்கள்). எனவே (அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும்) பெற்றோர்கள் இதை
பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. .
2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய நமது TNTJ மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.
பட்ட படிப்பு
1. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் *மாதம் ரூ. 1000* வரை கிடைக்கும்.
2. +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து பட்ட படிப்பு சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்).
2. பட்டபடிப்பை பொருத்தவரையில் தமிழக அரசு முஸ்லீம்களுக்கென்று தனியாக இதுவரை எந்த கல்வி உதவி தொகை திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை வழங்குகின்றது. படிப்பிற்க்கு தக்கவாறு *ஒரு வருடத்திற்க்கு ரூ.1000 முதல் ரூ.8500* வரை வழங்குகின்றது இதை பெருவதும் அவ்வளவு சிரமம்மில்லை, ஒவ்வொறு கல்லூரியிலும் இதற்க்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படும், அதை வாங்கி பூர்த்தி செய்துகொடுத்தாலே போதும், பெரும்பாலும் நமது சமுதாயம் இதை பெற்றுகொள்கின்றது. இந்த கல்வி தொகை பெற தாஸில்தாரிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும், வருமான சான்றிதழ் பெருவதற்க்கு அலுப்புபட்டு கொண்டு நமது சமுதாய மாணவர்களில் சிலர் இதை பெருவதில்லை.
3. மத்திய அரசு (தமிழக அரசுடன் இணைந்து) தொழில் கல்வி (ITI, Diploma, B.E/B.Tech, M.E/M.Tech) படிக்கும் சிறுபாண்மை (முஸ்லீம், கிறித்துவர்,சீக்கியர்) மாணவர்களுக்காக சிறப்பான இலவச கல்வி உதவி தொகை திட்டத்தை அமல் படுத்தி வருகின்றது (*வருடத்திற்க்கு ரூ.25,000 வரை*). *விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைக்காது.* (மேலும் விபரம் அறிய www.minorityaffairs.gov.in) ஒவ்வொறு வருடமும் அரசு குறிபிட்ட எண்ணிக்கையில் உதவியை வழங்குகின்றது. இந்த எண்ணிகை மிக மிக குறைவு, *நாம் கணகிட்ட வரை 200 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் இருக்கும். *இதில் இன்னோறு சிக்கல் இதை பெருவதாக இருந்தால் மேலே குறிபிட்ட தமிழக அரசு உதவி தொகை பெறமுடியாது. இது யாருக்கு கிடைக்கும் என்றால் ஐஐடி, என்ஐடி மாணவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் மத்திய அரசு இங்கு படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றது. மேலும் ஐஐடி, என்ஐடியில் இதை பெருவதற்க்காக சிறப்பான ஏற்பாடும் செய்து வைத்துள்ளனர். ஆனால் கட்டாயம் ரூ.25,000 வரை உதவி தொகை கிடைக்கும் ஐஐடி,என்ஐடியில் முஸ்லீம் மாணவர்கள் மிக மிக குறைவு.
பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவி தொகை
1. மேலே குறிபிட்ட தமிழக அரசு செயல் படுத்தும் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை பட்ட மேற்படிப்பிற்க்கும்கிடைக்கும். படிப்பிற்க்கு தக்கவாறு *ஒரு வருடத்திற்க்கு ரூ.2000 முதல் ரூ.8500 வரை* வழங்குகின்றது.
2. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட
மேற்படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் *மாதம் மாதம் ரூ.2000* *வரை கிடைக்கும்.* இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள்.
3. M.E/M.Tech படிக்க மத்திய அரசு (IIT) GATE என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் *மாதம் ரூ.5000 முதல் ரூ.8500* வரை வழங்குகின்றது.
மேலே குறிபிட்ட நுழைவுதேர்வு பற்றிய விபரத்தை நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.
முனைவர் படிப்பு (Phd) மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு
1. M.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசு CSIR -நுழைவு தேர்வு நடத்துகின்றது,இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.9000 வழங்குகின்றது.
2. மேலும் அராய்ச்சி படிப்புகளான உயிர் தொழிநுட்பம் (பயோ டெக்னாலஜி) உயிரில் (தாவரவியல், விலங்கியல் போன்ற வற்றில் உயர் கல்வி பயலும் மாணவர்களுக்கு இளநிலை விஞ்ஞானி தேர்வுகள் (DBT, JRF தேர்வுகள் ) ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தபடுகிறது. இது சம்பதமாக தகவல்களை நமது TNTJ மாணவரணியை தொடபு கொள்ளவும்.
2. சில நுழைவு தேர்வுகள் (GATE etc..) எழுதினால் பெரும்பாலும் உள்ள முனைவர் படிப்பிற்க்கு உதவிதொகை கிடைக்கும். முனைவர் படிப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் பாடம், படிக்கும் பல்கலை கழகம் போன்ற தகவலுடன் நமது TNTJ மணவரனியை தொடர்புகொண்டால் அவர்களுக்கு உதவி தொகை பெருவதற்க்கான வழிமுறைகளை விளக்குவோம்.
வெளி நாட்டு படிப்பிற்க்கான உதவி தொகை
அமெரிக்காவில் உதவி தொகை பெற
GRE , TOEFL என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இதை எழுத ரூ.18,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி). இதில நல்ல மதிப்பெண் எடுத்தால் அமெரிக்க பல்கலைகழகங்கள் *மாதம் ரூ.80,000 வரை* உதவி தொகை வழங்குகின்றது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, உதவி தொகை பெற்று, நல்ல பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தாலும் அமெரிக்கா
விசா வாங்குவது மிக மிக கடினம்.
இங்கிலாந்தில் உதவி தொகை பெற
IELTS- என்ற தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் இங்கிலாந்து பல்கலைகழகங்கள் *மாதம் ரூ.60,000* வரை உதவி தொகை வழங்குகின்றது. இதை எழுத ரூ.10,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி). பிற நாடுகள்* : மேலே குறிபிட்ட மூன்று நுழைவுதேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்கள் உதவி தொகை வழங்குகின்றன.
பிற கல்வி உதவிகள்
அரசு செய்யும் உதவி தொகைகளைகளை தவிர சில கல்லூரிகள், அவர்களுடைய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக தனி தனியாக உதவி தொகை வழங்குகின்றது. அது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும். (உதாரணத்திற்க்கு சென்னை புது கல்லுரியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம், ஐஐடி-யில் அங்கு பயிலும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம் , etc.....)
நாம் மேலே குறிபிட்டது போக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது சில கல்வி உதவிதொகை திட்டத்தை அறிவிக்கும், அவற்றை பற்றி அரசு அறிவிப்பு வெளியகும் போது நமது ஊடங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
அரசின் இலவச கல்வி திட்டமும் முஸ்லீம்களின் நிலையும்
1. மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச கல்வி உதவி தொகை மிக மிக குறைவாக உள்ளது, இதனால் நமது சமுதாயம் அதை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
2. அதிக பணம் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற நுழைவு/தகுதி தேர்வுகள் உள்ளன.இந்த தேர்வுகளெள்ளாம் கடினம் என நமது சமுதாய மாணவர்கள் நினைப்பதினால், *இதை எழுதி தேர்ச்சி பெரும் நிலையில் நமது சமுதாயம் இல்லை, இதனால் பெரும்பாலான இலவச கல்வி உதவி தொகை வீணகின்றது.*
3. நுழைவு/தகுதி தேர்வு இல்லாமல் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வாங்கி, சான்றிதழ் பெற்று பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் நமது சமுதாயம் இதில் அதிக அக்கரை காட்டுவதில்லை. காரணம் பெரும்பாலானவர்கள் இதை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர், அரசு நிறுவங்களுக்கு சென்று பழக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றனர், *பெரும்பாலான மாணவர்களின் தந்தைகள் வெளி நாட்டில் இருப்பதால் பெண்களே இந்த வேலையை செய்ய வேண்டி உள்ளது, அல்லது அடுத்த ஆண்களின் துனையை நாட வேண்டி உள்ளது இதனாலேயே பலர் அரசிடம் இருந்துகிடைக்கும் சிறிய அளவிளான கல்வி தொகையையும் பெருவதற்க்கு முயற்சிப்பதில்லை.
தீர்வு என்ன?
தமிழகத்தில் லட்சக்காணக்கான முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்,அனைவருக்கும் நாமே நேரடியாக சென்று கல்வி உதவி வாங்கி தருவது என்பது நடைமுறை சாத்தியமில்லை, எனவே நமது முஸ்லீம் சமுதாயத்திற்க்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு அரசிடம் இருந்து கல்வி உதவி பெருவது என்பதை விளக்க வேண்டும், அவர்களே தானாக சென்று கல்வி உதவி பெரும் நிலையை ஏற்படுத்த வேண்டும், இதைதான் தற்போது TNTJ மாணவரணி செய்து கொண்டு இருக்கின்றது,

கல்வி உதவி சம்மதமான முக்கியமான இணைய தளங்கள்
தமிழக அரசின் தேர்வுகளுக்குகான இணையம்
www.dge.tn.gov.in/
தேசிய திறன் தேர்வு இணையம்
www.ncert.nic.in
மத்திய அரசின் சிறுபாண்மை நலதுறை
www.minorityaffairs.gov.in
கல்வி உதவிக்கான மத்திய அரசின் இணையதளம்
www.educationsupport.nic.in
பிற கல்வி உதவி சம்மந்தமான தகவல் பெற
www.scholarshipsinindia.com
மேலும் கீழ்க்கானும் தமிழக அரசின் அமைப்புகள் கல்வி உதவி , இலவச பயிற்சி போன்றவற்றை சிறுபாண்மை மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.
1.சிறுபாண்மையினர் நல இயக்கம்
எண்:807, அண்ணாசலை, சென்னை-600002
2.தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதரா வளர்ச்சி கழகம்
எண்:807, அண்ணாசாலை, 5வது மாடி, சென்னை-600002
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன் 688 , அண்ணா சாலை சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட் ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை - 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால் கீழத் தெரு ராஜகிரி - 614 207
14. டாம்கோ 807 - அண்ணா சாலை 5 வது சாலை சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான் Managing Director Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
16. மியாசி புதுக் கல்லூரி வளாகம் பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
17. S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை -

ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?

Post



இந்தியர்கள் எல்ஐசி மேல் அதீத பிரியம் கொண்டுள்ளனர். காலப்போக்கில், இன்சூரன்ஸ் என்றாலே அது எல்ஐசி தான் என்பது போல் ஆகிவிட்டது. பெரும்பாலான எல்ஐசி பாலிசிதாரர்கள், அவர்தம் பாலிசிகளின் ஸ்டேட்டஸை கஷ்டப்பட்டு கம்பெனிக்குச் சென்று பார்ப்பதைக் காட்டிலும், ஆன்லைனில் பார்ப்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.

உங்கள் பாலி;fயின் ஸ்டேட்டஸை ஆன்லைன் மூலமோ அல்லது எஸ்எம்எஸ் மூலமோ அறிந்து கொள்வதற்கான எளிய வழியைப் பார்ப்போம்.
பாலிஸி ஸ்டேட்டஸை எவ்வாறு ஆன்லைனில் பார்ப்பது?
ஆன்லைனில் ஸ்டேட்டஸைப் பார்க்க முதலில் எல்ஐசி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். புதிதாக பதிவு செய்வதாக இருந்தால் இங்கு க்ளிக் செய்யவும். இதற்கு பாலிசி நம்பர், ப்ரீமியம் தொகை, பிறந்த நாள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த உறுப்பினராக இருந்தால் நீங்கள் இங்கு லாக்-இன் செய்து உங்கள் தகவல்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் பதிவு செய்த பின் உங்கள் பாலிசி நம்பரை மட்டும் நிரப்பி ஸ்டேட்டஸை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ். மூலம் எவ்வாறு தகவல்களை பெறலாம்?
உங்கள் பாலிசியைப் பற்றிய தகவல்களை 56677 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் அறிந்து கொள்ளலாம். ஒருவர், தனக்கு கிடைக்கக்கூடிய லோன்கள், போனஸ் தொகை ஏற்றம், ரிவைவல் கொட்டேஷன், ப்ரீமியம் பொசிஷன் போன்ற பல தகவல்களை இவ்வாறு பெறலாம்.
உதாரணமாக, ஆஸ்க்எல்ஐசி (பாலிஸி நம்பர்) ப்ரீமியம்(ASKLIC (Policy Number) PREMIUM) என்பதை 56677 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
இதில்,
• ப்ரீமியம் - பாலிசியின் கீழ் வரக்கூடிய தவணை ப்ரீமியம்
• ரிவைவல் - பாலிசி காலாவதியாகும் பட்சத்தில் செலுத்த வேண்டிய ரிவைவல் தொகை
• போனஸ் - வழங்கப்பட்ட போனஸ் தொகை
• லோன் - கடனாகக் கிடைக்கக்கூடிய தொகை
• என்ஓஎம் - நாமினேஷன் தகவல்கள் என்று அர்த்தப்படுகின்றன.

இலவச இணைய மின் நூலகங்கள்

கீழ்க்கண்ட தளங்களில் உங்களுக்கு தேவையான மின் நூல்களை பெற்றுக்கொள்ளலாம்.

worldpubliclibrary.org/
archive.org/details/texts
bartleby.com/
onlinebooks.library.upenn.edu/lists.html
bibliomania.com/
planetebook.com/
e-book.com.au/freebookswww.netlibrary.net/
infomotions.com/
ipl.org/reading/
gutenberg.org/
forgottenbooks.org/
readprint.com/
en.wikibooks.org
e-booksdirectory.com/

free-ebooks-canada.com/
book-bot.com/witguides.com/
2020ok.com/
manybooks.net/

globusz.com/Library/new_ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free-online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA!

http://www.freebookspot.com/
http://obooko.com/
http://www.bookyards.com/
http://www.onlinefreeebooks.net/ - general books,computer,technical,user manuals and service manuals available.
http://digital.library.upenn.edu/books/
http://e-library.net/

cdl.library.cornell.edu/ selected digital collections of historical significance.
bookboon.com/in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.
TAMIL E-BOOKS DOWNLOADS
தமிழ் முஸ்லிம் நூலகம்
knowledge at fingertips
tamilvu.org- தமிழ் இணைய பல்கலை கழக நூலகம்

www.4shared.com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம்.
தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
Electronics Service manual,data-sheets,Schematic diagram

கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
http://ebooks-library.blogspot.com/
http://www.zillr.org/
http://freecomputerbooks.com/

மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.

EncyclopaediaBritannica 29 Volumes in djvu format. Use djvu viewer program to view the files

Maran Collects & Shares -Software related EBooks, Personality Development Books, Audiobooks, IT Certification Materials with Test Engines, Software Video Tutorials, Encyclopedia of All Kinds, Rare Collection of Tamil Songs, Tamil Devotional Songs, Indian Instrumentals & Many More.

http://www.magazinesdownload.com/ -Download Popular magazines from this site.

http://www.booksshouldbefree.com/ Download Audio books as mp3 files

அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம்..






அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம்...

www.tnstc.in

High definition televisions (HDTV) மாடல் எண் வைத்து முழுவிபரமும் கண்டுபிடிக்கலாம்.


வீடியோ தரத்தில் ஒரு மைல்கல்லாக வந்திருக்கும் HDTV -களின் மாடல் எண் வைத்தே அதன் முழுவிபரங்களையும் விரிவாக தெரிந்து கொள்ள நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
துல்லியமாக சிறிய அசைவுகளை கூட நேர்த்தியாக அழகாக காட்டும் HDTV களில் பல நிறுவனங்கள் குறிபிட்ட சேவைகளை சொல்லி மக்களை கவர்கின்றனர், ஆனால் ஒரு நிறுவனத்தின் மாடல் எண் வைத்தே அந்த நிறுவனத்தின் HDTV-ல் என்னவெல்லாம் சேவை கொடுக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி: http://www.retrevo.com/samples/HDTV-Decoder.html
இத்தளத்திற்கு சென்று நாம் மாடல் எண்ணை வைத்து எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை உதாரத்துடன் விளக்குகின்றனர், அது LED -யா அல்லது LCD -யா ல்லது Plasma வா என்று முதல் இரண்டு எழுத்துக்களை வைத்தே கண்டுபிடிக்கலாம், அடுத்து இருக்கும் இரண்டு எண்கள் திரையின் அளவை (Screen Size) எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.அடுத்து இருக்கும் ஒரு எழுத்து எந்த ஆண்டில் வெளிவந்தது என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. அதைத் தொடர்ந்து  இருக்கும் நான்கு எண்களும் எந்த Series என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. புதிதாக LCD வாங்குபவர்களுக்கு அதைப்பற்றிய முழுவிபரங்களையும் எளிதாக கண்டுபிடிக்க உதவும் இந்தத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கும் தளங்கள்


மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி!


இணையதளம் மூலம் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி!

இனி இணையதளம் மூலம் மாணவர்கள் அரசு கல்வி உதவி பெறலாம்!
Presentation1பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க புதிய இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.
www.edistrict.tn.gov.in எனும் இந்த தளத்திலேயே மாணவர்கள் இனி கல்வி உதவித் தொகைக்கான அனைத்து விவரங்களையும் பெறலாம்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், இணையதளத்தின் மூலம் கல்லூரி முதல்வர்களால் பதிவு செய்யப்படும்.
இதன்பின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் செய்யப்படும். பின்னர், இணையதளத்தின் மூலம் பிற விவரங்கள் அறிந்து அதற்கேற்ப கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இதன் காரணமாக தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும். மாணவர்கள் தங்களது விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது; யாரிடம் உள்ளது; எப்போது கிடைக்கும்; எவ்வளவு உதவித் தொகை கிடைக்கும் என்ற விவரங்களை தாங்களாகவே இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகையும் இந்த முறையில் வழங்கப்படும் என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்கள், உடனடியாக தங்கள் கல்லூரி முதல்வர்களை அணுகி விவரங்கள் பெற்றுக் கொள்ளவும்.