உலகத்தின் 1402 டிவி சேனல்களை காண

ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.


நம் கணினி மூலம் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல
மொழிகளிலும் இருக்கும் 1402 டிவி சேனல்களையும் ஒரே தளத்தில்
இருந்து கண்டு ரசிக்கலாம்  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணையதளங்கள்
இருந்தாலும் சில தளங்கள் ஆன்லைன் மூலம் பார்க்க கட்டணம்
வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக
ஆன்லைன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் 1402  டிவி
சேனல்களையும் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.tvweb360.com/
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்
டிவி சேனல் பார்க்க வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுக்க
வேண்டும் அடுத்து அந்த நாட்டில் எந்த மொழி சேனல் வேண்டுமோ
அதையும் தேர்ந்தெடுந்தால் குறிப்பிட்ட மொழி சேனல்கள் பல
நமக்கு கிடைக்கும் இதில் எந்த சேனல் வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து சொடுக்கினால் அந்த சேனலை நாம் இலவசமாக
பார்க்கலாம். செய்திகள் , வரலாறு , காமெடி, பொழுது போக்கு
சினிமா எனப் பல சேனல்களை நாம் இலவசமாக இங்கிருந்து
பார்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ள


தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு ( விஜிலென்ஸ் ) அதிகாரிகளை எளிதாக தொடர்பு கொள்ள உதவும் இணையதளம்.

அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையை செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரை எங்கு எப்படி புகார் அளிக்க வேண்டும் என்று தமிழ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளம் தெளிவாக தெரிவிக்கிறது ஒவ்வொரு மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் போன் நம்பர் முதல் அலைபேசி எண் வரை அத்தனையும் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ள
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ” விஜிலென்ஸ் “ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துவருவதை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்போம், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை பற்றிய தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுங்கள் என்று சொல்வதை கேட்டிருப்போம் எப்படி இவர்களை தொடர்புகொள்வது இவர்களின் போன் நம்பர் முதல் அனைத்துவிபரங்களையும் சொல்ல அரசு இணையதளம் ஒன்று உள்ளது இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.dvac.tn.gov.in/
தமிழகத்தில் அரசுத்துறையில் வேலை பார்க்கும் நபர்கள் யாராக இருந்தாலும் சரி தங்கள் கடமையை செய்ய லஞ்சம் கேட்டால் உடனடியாக நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்பு கொண்டு கூறலாம். இத்தளத்திற்கு சென்று இதன் நடவடிக்கைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். இடது பக்கம் இருக்கும் Directory என்பதை சொடுக்கி வருவதில் நாம் எந்த Range ல் இருக்கும் அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டுமோ அவர்களை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக  ஒவ்வொரு Range-லும் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும் அலுவலக முகவரி , போன் நம்பர், அலைபேசி எண் என அனைத்தையும் கொடுக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கு லஞ்சம் கேட்டாலும் இவர்களுக்கு தெரிவிக்கலாம். உதாரணமாக ஒரு காவல்நிலையத்தில் லஞ்சம் அதிகமாக விளையாடுகிறது என்றால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். லஞ்சத்தை ஒழிக்க தமிழகஅரசுடன் நாமும் கைகோர்த்து செல்வோம்.கண்டிப்பாக இந்தப்பதிவு விஜிலென்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவின் முக்கிய தலைவர்களையும் , கலாச்சாரத்தையும் எடுத்துச்சொல்லும் பயனுள்ள தளம்.


இந்தியாவின் முக்கிய தலைவர்களையும் , கலாச்சாரத்தையும் எடுத்துச்சொல்லும் பயனுள்ள தளம்.

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
இந்தியா சுதந்திரம் பெற தம் இன்னுயிரை துறந்த தியாகிகளுக்கு நன்றி என்று ஒருவார்த்தையில் சொல்ல முடியாது. எத்தனை காலம் தன் உயிரையும் தம் குடும்பத்தினரையும் பொருட்படுத்தாது நம் தேசத்திற்காக எல்லாவற்றையும் துறந்த தியாகிகளை நினைவு கூறும் வகையிலும் இந்தியாவில் கலாச்சாரத்தை எடுத்து அனைத்து மக்களுக்கும் எடுத்துச்சொல்லும் விதத்தில் ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இந்திய கலாச்சாரம்
சாதி , மதம் , இனம் என்ற அனைத்துயுமே கடந்து என் தேசம் விடுதலை அடையவேண்டும் அதற்காக நான் எதையும் இழக்கத்தயார், இனி வரும் நம் குழந்தைகள் விடுதலை காற்றை சுவாசிக்கட்டும் என்ற நோக்கில் விடுதலை வாங்கி கொடுத்த தியாகிகளை என்று நினைவில் இருக்கும் வண்ணம் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://www.culturalindia.net
எங்கள் கலாச்சார இந்தியா என்னவெல்லாம் இருக்கிறது மறக்க முடியாத தலைவர்கள் முதல் பல அரிய கலைகள் வரை அத்தனையும் தெளிவாக விபரங்களுடன் தெரிவிக்கிறது. திலகர் முதல் சரோஜினி நாயுடு வரை அத்தனை போராளிகளின் விபரத்தையும் படத்துடன் கொடுக்கிறது. இந்திய கலாச்சாரம் என்ற தலைப்பில் தலைவர்கள் , சீர்திருத்தவாதிகள்  , இந்திய ஆடை , இந்திய உணவு , இந்திய கட்டிடக்கலை , இந்திய நகைகள் , இந்திய கைத்தொழில் , விலையுயர்ந்த கற்கள், இந்திய சினிமா , இந்திய கோட்டைகள் , இந்திய யாத்திரைக்கு , இந்திய மதங்கள் , இந்திய நினைவுச்சின்னங்கள் , தேசிய குறியீடுகள் , இந்தியாவில் உள்ள கோவில்கள் , இந்திய டூர்ஸ், இந்திய கலை , இந்திய ஓவியர்கள் , இந்திய ஓவியங்கள் , ரங்கோலி , இந்திய நடனங்கள்,  இந்திய பாரம்பரிய நடனங்கள் , இந்திய பாரம்பரிய நடன கலைஞர்கள் , இந்திய கிராமிய நடனங்கள் , இந்திய வரலாறு , பண்டைய இந்தியா , நவீன இந்திய வரலாறு , இந்திய ஃபோக்டேல்ஸ், கதைகள் Hitopadesha , Jatakac கதைகள் ,கதைகள் பஞ்சதந்திர கதைகள் , இந்திய இசை , இந்திய கிளாசிக்கல் பாடகர்கள் , இந்திய பாடகர்கள் , இந்திய கனடிய , தீம் கனடிய திருமண வழக்கங்கள் , பெண் தயார்படுத்தல்கள் , பிராந்திய கனடிய , ஆண் தயார்படுத்தல்கள் , திருமண சடங்குகள் , திருமண ஏற்பாடுகள் இன்னும் பலவிதமான தகவல்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் இந்தத்தளத்தை அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது. நம் வின்மணியின் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பயனுள்ள இணையதளங்கள்

பயனுள்ள இணையதளங்கள்

தமிழ் தளங்கள்

ஆண்டி வைரஸ்

தமிழ் நாளேடு
GAMES

TAMIL MP3 Downloads

SOFTWARE DOWNLOADS
Mobile Software
e-mail
Now get SPEED POST Delivery Report on your Mobile by SMS.... Type:sp"space" Speed Post No.Send to 55352
Find out all entrance exam notifications and details www.successcds.நெட்

முக்கிய தளங்கள்

கிரிக்கெட் :

















வாழ்த்து அட்டைகள் அனுப்ப ...


















வேலை வாய்ப்பு தகவல் தளங்கள்


























இசை பிரியர்களுக்காக ..
























மிக சிறந்த தளங்களின் தொகுப்பினை தரும் 474747

மிக சிறந்த தளங்களின் தொகுப்பினை தரும் 474747

           எப்போதும் சிறந்தவற்றை பயன்படுத்தவே எல்லோரும் விருப்பம் கொள்கிறோம். இணையத்தில் கூகிள் தேடல் மூலம் எமக்கு தேவையான தளங்களை தேடி பெற்று கொள்ள முடியும். எனினும் மிக சுலபமாக மிக சிறந்த தளங்களை கண்டு பிடிக்க உதவுகிறது 474747 .



474747  என்பது மிக சிறந்த தளங்களின் பட்டியல் தரும் தளமாகும் . இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் பயனுள்ள இணையத்தளங்கள் செய்திகள் ,அரசியல் , காலநிலை , சமூக வலைத்தளம்,  வங்கி போன்ற 40 வகைப்படுத்தல்களில் சிறந்த தளங்கள் அவற்றின் சின்னங்களுடன் இணைய இணைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன . 

அத்துடன் உலகம் முழுவதும் பிரபலமான 18 தளங்கள் கொடுக்கபட்டுள்ளதுடன் கூகிள் தேடல் வசதியினையும் முதன்மைப்படுத்துகிறது இந்த தளம் . 

இந்த தளம் ஒரு இணைய அகராதியாக விளங்குகிறது . 

தள முகவரி http://www.474747.net/

கணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்

கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் 
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது 
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். அனால் கணிதபாடம் அவ்வாறு 
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக 
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் 
கசக்கும்; 



                இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல 
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.

கணித பாடத்தினை இணையத்தில் கற்றுகொள்ள சில பயனுள்ள தளங்களை 
தொகுத்துள்ளேன். 



1 . HOME SCHOOL MATHS.NET . 
     தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று 
கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது; 

   கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை 
விளக்கத்துடன் தருகிறது இந்த தளம். இந்த தளம் பற்றி என் வலைத்தளத்தில் 
 ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். 

    கணித பாடம் தொடர்பான வினாக்கள் , பிரச்சனைகளுக்கு செயல் முறை 
விளக்கங்களுடன் பதில் பெற உதவுகிறது. 

   கணித பாடம் மட்டுமல்லாது அறிவியல் பொது அறிவு வினாக்களுக்கும் 
விடை பெறலாம் இந்த தளத்தில். 

    கணித தந்திரோபாயங்களை கற்றுகொள்ள உதவுகிறது இந்த தளம். 

 மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித  பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம். 

 மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம். 

 கணித பாட விளக்கங்கள் மற்றும் செயல் முறை பயிற்சிகளை உள்ளடக்கியது.

   கணித பாட அலகுகள் ரீதியாக விளக்கங்கள் , செயல்முறைகள், பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது. 

      கணிதம் மற்றும் அறிவியல் விளங்கங்களை வீடியோ மூலம் இந்த தளத்தில் கற்றுகொள்ள முடியும். 

இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்

இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்

புதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 


  இந்த தளத்தில் ஏகப்பட்ட இந்தி திரைப்படங்கள் உள்ளன. இந்த தளத்தில்   
 ஆங்கில திரைப்படங்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்ட திரைப்படங்களையும்  
  பார்க்கலாம். 


    இந்த தளத்தில் இந்தி ,தமிழ்., தெலுங்கு , மாரட்டி , கன்னடம் ,மலையாளம் , 
    பஞ்சாபி என பல இந்திய மொழி திரைப்படங்கள் உள்ளன . 

    இந்த தளத்தில் இந்திய மொழி திரைப்படங்களுடன் ஆங்கில  
    திரைப்படங்களையும் பார்க்கலாம் .

    இந்த தளத்தில் இந்திய திரைப்படங்களுடன் ஆங்கில மற்றும் இத்தாலிய  
    திரைப்படங்கள் பார்க்கலாம் . 

     இந்தி மொழி புதிய திரைப்படங்கள் பார்க்க உதவும் . 

    இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில் 
    நிறைந்துள்ளன 

  புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன . 

    இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில் 
    நிறைந்துள்ளன 

    இந்தி சிறந்த புதிய திரைப்படங்களை பார்க்க உதவுகிறது .

      புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .

இலவச சட்ட ஆலோசனை சேவை

இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)

இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க மூன்று வக்கீல்களுடன் இணைந்து தமிழ்நாடு  
சட்ட ஆலோசகர்கள் என்ற இணையத்தளத்தினை துவக் கியிருக்கி றார்கள்.. இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல் லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.
எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்க ளையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் இணைந்து செயலாற்றலாம்.
இணைய தள முகவரி – http://tnlegaladvisors.com

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா?

உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனைவது நபர் என்ற எண்ணிக்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.


முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகும் அதில் தற்போதைய மக்கள் தொகை எண் இருக்கும். (அதை கவனியுங்கள் ஒவ்வொரு நொடிக்கும் 5 முதல் 10 அதிகமாகி கொண்டே இருக்கும். அவ்வளவு வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டு உள்ளது) அதில் உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். 


Get Started என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் இன்று விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும். 


விவரங்களை பூர்த்தி செய்த பிறகு கீழே உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தினால் அடுத்த வினாடி உங்களுக்கு முன்னாடி உலகில் எத்தனை பேர் பிறந்து உள்ளார்கள் என காட்டும். 


மற்றும் உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களின் எண்ணிக்கை கண்டங்களின் அடிப்படையில் பிரித்து காட்டும். 

இந்த தளத்திற்கு செல்ல -www.7billionandme.org

யூடியுபில் இந்திய திரைப்படங்களை இலவசமாக காண-

யூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை இலவசமாக காண- 1500+ Indian movies on Youtube

இயந்திரம் போல் ஆகிவிட்ட மனித வாழ்க்கையில் சினிமாக்கள் தான் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு பண்டிகையா அல்லது விசேஷ நாட்களோ வந்தால் எந்த டிவியில் என்னென்ன படம் போடுராங்கன்னு தான் முதலில் பார்ப்போம். அந்த அளவு டிவியும் திரைப்படங்களும் நம்மை அடிமை படுத்தி விட்டது என்று கூட கூறலாம். Youtube பற்றி அனைவரும் அறிந்து இருப்போம் இணையத்தில் வீடியோக்களை கண்டு ரசிக்க கூகுள் நிறுவனம் வழங்கும் சேவையாகும். தற்பொழுது youtube தளத்தில் வீடியோக்கள் மட்டுமின்றி முழு நீளத் திரைப்படங்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த youtube தளத்தில் 1500 இந்திய திரைப்படங்களை இலவசமாக காணலாம். ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி இப்படி பல மொழிகளில் திரைப்படங்கள் காணப்படுகிறது.


இந்த சேனலில் ஹிந்தி மொழியில் தான் அதிக அளவு திரைப்படங்கள் காணப்படுகிறது. தமிழில் 50க்கும் அதிகமான திரைப்படங்கள் காணப்படுகிறது. இந்த youtube சேனலில் கீழே உள்ள பல்வேறு வகைகளில் திரைப்படங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • New Releases
  • Action & Adventure
  • Animations & Cartoons
  • Classics
  • Comedy
  • Crime
  • Documentary
  • Drama
  • Family
  • Foreign Film
  • Horror
  • Indian Cinema
  • Mystery Suspense
  • Romance
  • Science Fiction
இந்த Youtube சேனலில் நாளுக்கு நாள் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 

மொத்த திரைப்படங்களை காண - All Movies
தமிழ் திரைப்படங்களை மட்டும் காண - Tamil Movies Only